உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.60 லட்சம் போலி சிகரெட் பறிமுதல்

ரூ.60 லட்சம் போலி சிகரெட் பறிமுதல்

புதுடில்லி: டில்லியின் வடகிழக்கு புறநகர் பகுதியில், போலி சிகரெட்கள் சப்ளை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் வடகிழக்கு டில்லி, பிரஷாந்த் விஹார் பகுதியில் போலி சிகரெட் விற்பனையில் ஈடுபட்டிருந்த அக்ராம், 32, ராஜ்ரானி, 70, மற்றும் கிஷன் முராரி, 28 ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் துருவி துருவி விசாரித்ததில், பிரஷாந்த நகர் பகுதியில் போலி சிகரெட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை சோதனையிட்ட போலீசார், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள. 4.71 லட்சம் போலி சிகரெட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், போலி சிகரெட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை