உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

ரூ.6,691 கோடி வரவில்லை: ரூ.2000 நோட்டு கணக்கு சொல்கிறது ரிசர்வ் வங்கி

புதுடில்லி: பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 98.12 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேநேரத்தில் ரூ.6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் திரும்ப வரவில்லை. கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அக்., 07 வரை அனைத்து வங்கிக்கிளைகளிலும், இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அக்.,09 முதல், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அவை திரும்ப பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, தபால் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறியிருந்தது.இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிச.,31 நிலவரப்படி 98.12 சதவீத 2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.6,691 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே, அரசிற்கு வரவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

gayathri
ஜன 02, 2025 09:17

முன்பு எல்லா நோட்டுகளை வந்து விட்டது என்று சொன்னார்களே


Mani . V
ஜன 02, 2025 05:50

முகமது- பின்-துக்ளக்? இரும்புக்கை கோப்பால் சார், சீக்கிரம் ரிட்டர்ன் செய்யுங்க


Anonymous
ஜன 01, 2025 21:46

கோமாளி ஆண்டா நாடு எப்டி இருக்கும்னு காட்டுறதுக்கு , தமிழ்நாட்டு விடியல் அரசு இருக்கே, நல்லா பார்த்துக்கோங்க, ஸ்டாலின் போஸ்டர் மேல செருப்பு வீசின பாட்டிய பிடிக்க போலீஸ் தனிப்படை, இந்த மாதிரி கேலிக்கூத்து இங்கே நடக்குது, நல்ல பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள்.


Constitutional Goons
ஜன 01, 2025 21:23

நிர்வாகத்திறமையற்றவர்களை சிறையிலடைக்கவேண்டும்


Priyan Vadanad
ஜன 01, 2025 21:09

வந்திருக்கிற நோட்டுகளை திரும்பவும் புழக்கத்தில் விட்டுவிட்டால் மக்களிடம் நூறு சதவிகிதம் பணம் இருக்குமே கொடுக்கவேண்டியது அப்புறம் பிடுங்க வேண்டியது. அப்புறம் இவ்வளவுதான் வந்தது என்று அரசியல் தலைவர்களை போல புள்ளிவிபரம் கொடுத்துவிட வேண்டியது. யாரோ சொன்னார்கள்: கோமாளி ஆண்டால் நாடு ஒரு சர்க்கஸ் கூடாரமாகுமாம்.


Anonymous
ஜன 01, 2025 21:40

விஷயம் என்ன என்று அடிப்படையே புரியாமல் , ஏன் கருத்து போட வர்றீங்க? அரசியல்வாதிகளின் பதுக்கல் கருப்பு பணம் வெளியே வராமல் இருக்கிறது என்று இந்த செய்தியின் பொருள், பணத்தை வெளியே விட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று ஒரு தங்கமான கருத்து போட்டு, உங்க அறிவை பரை சாற்றி விட்டீர்கள், அருமை.


Barakat Ali
ஜன 02, 2025 06:50

அநானிமஸ், திராவிடமாடலின் அடிமைகளுக்கு குறைந்த பட்ச அறிவு கட்டாயமில்லை ....


ராமகிருஷ்ணன்
ஜன 01, 2025 20:49

திமுக அமைச்சர்களின் மெடிக்கல் காலேஜ், மற்ற நிறுவனங்களில் தேடி பாருங்க. கிடைத்துவிடும்.


Priyan Vadanad
ஜன 01, 2025 21:05

ஏன் சார், அதுக்கு உங்கள் வீட்டில் ஏதாவது ஆவணம் பதுக்கி வைத்திருக்கிறீர்களா?