உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக மாற்றியுள்ளார்.இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981ம் ஆண்டு, கிட்டத்தட்ட 20,750 ரூபாய் முதலீட்டுடன் துவக்கப்பட்டது.இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, இவர் தன் நான்கு மாத வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 240 கோடி ரூபாய் மதிப்பிலான, 0.04 சதவீத்திற்கு சமமான 15 லட்சம் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் வாயிலாக, ஏகாகிரஹ் இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.இன்போசிஸ் நாராயண மூர்த்தி தற்போது, 0.36 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இது இவரின் முந்தைய பங்கான 0.40 சதவீதம் அதாவது, 1.51 கோடி பங்குகளை விட குறைவானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

UNMAIYA SONNEN
மார் 19, 2024 16:19

Nanga mattum 17 hour.


PR Makudeswaran
மார் 19, 2024 15:32

எனக்கு புரியவில்லை. அவரிடம் இருப்பது. 0.36 சதவிகிதம் பங்கு.இன்போசிஸ் மதிப்பு ஜாஸ்தி. இதுவும் லஞ்சம் வாங்கி ஊழல் செய்து சேர்த்தல்ல. எதிர் மறை கருத்துக்கள் ஏன்?


ராவ்ஜீ
மார் 19, 2024 14:03

வாரிசுக்கு வழங்காம மத்தவங்களுக்கா குடுப்பாரு? போய் உழைச்சு சாப்புடுங்க.


vbs manian
மார் 19, 2024 10:56

பங்கு வாங்கியவர்களுக்கு கொஞ்சம் தாராளமாக டிவிடெண்ட் வழங்கலாம்.


Kasimani Baskaran
மார் 19, 2024 09:06

மாடல் குடும்பம் ஆண்டுக்கு 15000 கோடி சேர்த்திருப்பதாக டக்ளசை ஆதாரம் காட்டி அண்ணாமலை சொன்னாரே… அதை ஒப்பிட்டால் இதெல்லாம் ஜுஜுபி…


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2024 11:46

ஆண்டுக்கு 15000 கோடி சேர்த்திருப்பதாக ஆதாரம் காட்டி அண்ணாமலை சொன்னாரே... அமலாக்கம் ஏன் அமைதிகாக்கிறது


R Kay
மார் 19, 2024 00:19

வயிற்றெரிச்சல் டாஸ்மாக் குடும்ப கொத்தடிமைகள் இன்னும் மவுணம் ஏன்?


Ramesh Sargam
மார் 18, 2024 23:35

இவ்வளவு சொத்துக்கள் கொடுத்தால் 'பொதுவாக' இளைஞர்கள் படிப்பில் முதலில் நாட்டம் காட்ட மாட்டார்கள். வேலைக்கு போக விரும்பமாட்டார்கள். சோம்பேறியாக வெட்டியாக திரிந்து குற்றங்கள் புரிந்து குற்றவாளிகளாக மாறுவார்கள் - பொதுவாக.


Ramesh Sargam
மார் 18, 2024 23:32

உன்னோட மண் புழல் சிறை, திஹார் சிறையில் உள்ளது. அங்கு போனவுடன் எடுத்துக்கொள்.


தாமரை மலர்கிறது
மார் 18, 2024 22:53

பேரனுக்கு இருநூற்றி நாற்பது கோடி ரூபாய் பரிசு, அம்பானி தனது மகனுக்கு ஆயிரதுஐநூறு கோடி ரூபாய் கல்யாணம் இது போன்ற செய்திகள் நாட்டின் வளர்ச்சியையும், இந்தியாவின் பொருளாதார வலிமையை பறைசாற்றுகிறது. வரும் ஜூலை ஆனந் அம்பானி கல்யாணத்திற்கு வருங்கால அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருவார். இந்தியாவின் பொருளாதாரம் மோடியின் ஆட்சியில் உலகை அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கிறது.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி