உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.30 கோடி தங்க சிலை காணிக்கை

அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.30 கோடி தங்க சிலை காணிக்கை

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான ராமர் சிலையை, காணிக்கையாக அனுப்பியுள்ளார். இது குறித்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறியதாவது: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகான ராமர் சிலையை, 'பார்சல்' வாயிலாக அனுப்பியுள்ளார். தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சிலையில், வைரங்கள், ரத்தினங்கள் உட்பட, அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 10 அடி உயரம், 8 அடி அகலத்தில் ராமர் சிலை உள்ளது. இதை காணிக்கையாக செலுத்திய பக்தரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் வரை இருக்கலாம். வரும் நாட்களில் சிலை தொடர்பான, முழுமையான தகவல்களை தெரிவிப்போம். தமிழகத்தின் தஞ்சாவூரின் சிலை தொழில்நுட்ப நிபுணர்கள், ராமர் சிலை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நுணுக்கமான கலை வடிவத்தை கொடுத்துள்ளனர். இந்த சிலையில் என்னென்ன உலோகங்கள் உள்ளன என்பதை, வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். வரும், டிச., 29 முதல், அடுத்தாண்டு ஜன., 2ம் தேதி வரை அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா நடக்கவுள்ளது. இந்த நாளில், காணிக்கையாக வந்துள்ள தங்க ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய, ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ