உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுனர்களுக்கு ரூ.500 சிறப்பு படி

ஓட்டுனர்களுக்கு ரூ.500 சிறப்பு படி

பெங்களூரு: பி.எம்.டி.சி., புதிய வழித்தடங்களில், பஸ் போக்குவரத்தை துவக்குகிறது. ஆனால் தினமும் 6.8 சதவீதம் ஊழியர்கள் விடுமுறை எடுப்பதால், பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. பஸ்களை இயக்க முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், வார விடுமுறை தவிர, வேறு விடுமுறைகள் எடுக்காத ஊழியர்களுக்கு, சிறப்பு படி வழங்க பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:அந்தந்த மாதங்களில், வார விடுமுறைகளை தவிர, 26 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு ஆஜராகும் ஓட்டுனர்கள், அந்த மாதம் முழுதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக ஓட்டுனர்களுக்கு, மாதந்தோறும் 500 ரூபாய் சிறப்பு படி வழங்கப்படும்.மாதந்தோறும் ஊதியம் வழங்கு முன், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஓட்டுனர்கள் பட்டியலை, மண்டல அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், ஊதியத்துடன் 500 ரூபாய் சிறப்பு படி சேர்த்து வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை