துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சந்திப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இன்று (டிசம்பர் 17) துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.கடந்த செப்டம்பர் 12, அன்று நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பல ஆண்டுகளாக சேவகராக பணியாற்றிய நீண்ட காலப் பின்னணியைக் கொண்டவர்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது, அந்த அமைப்பை 'உலகின் முதன்மையான தேசபக்தி அமைப்பு' என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.