மதுரா நகரில் நிகழ்ச்சி ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்பு
மதுரா:உ.பி.,யின் மதுரா நகரில் நேற்று துவங்கிய, 'கார்யகர்த்தா விவாஸ் வர்க் பிரதம்' முகாமில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார். நேற்று துவங்கி, மூன்று நாட்கள் இந்த முகாமில் அவர் பங்கேற்கிறார்.மதுரா நகர் அருகே உள்ள பாரா என்ற இடத்தில் உள்ள பார்கம் என்ற இடத்தில் உள்ள தீன்தயாள் கவ் விஞ்ஞான் அனுஸ்தான் எவம் பிரஷிக் ஷான் கேந்திராவில், 20 நாட்கள் ஆர்.எஸ்.எஸ்., முகாம் நடக்கிறது. இடம்பெயர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் திறன் மேம்பாட்டிற்காக இந்த மாநாடு நடக்கிறது. இதில், மூன்று நாட்கள் கலந்து கொள்ள உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பங்கேற்பாளர்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.கடந்த மாதம் 28ல் துவங்கிய இந்த மாநாடு, வரும் 18ல் நிறைவடைகிறது. நாடு முழுவதும் இருந்து, 251 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், மோகன் பகவத், பீஹாரின் பாட்னா நகரிலிருந்து வந்து பங்கேற்கிறார்.