வாசகர்கள் கருத்துகள் ( 1 )
I know RSS workers are selflessly working for the people unity, Pappu always talk untruth only
கிஷன்கஞ்ச்: ''பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தங்கள் நம் நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகின்றன,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை, கடந்த 14ல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவக்கினார். பீஹாருக்கு வருகை
பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையை, பீஹாரில் நேற்று தொடர்ந்தார்.கடந்த 2020ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு பின் முதன்முறையாக பீஹாருக்கு ராகுல் நேற்று வந்தார். பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், இண்டியா கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ., கூட்டணிக்கு மாறிய நிலையில், நேற்று ராகுல் பீஹாருக்கு வந்தார். பீஹாரின் கிஷன் கஞ்ச் பகுதியில் அவர் பேசியதாவது:ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் சித்தாந்தங்கள் நம் நாட்டில் வன்முறையையும், வெறுப்பையும் பரப்புகின்றன. அவை, மதம், ஜாதி மற்றும் மொழியின் பெயரால் மக்களை, தங்களுக்குள் சண்டையிட துாண்டுகின்றன. யாத்திரை
சகோதரர்களாகிய நாம், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொள்வதை தான், ஆர்.எஸ்.எஸ்.,சும், பா.ஜ.,வும் விரும்புகின்றன. ஆனால், நாங்கள், மக்களை ஒன்றிணைக்க உழைக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.யாத்திரையில் பங்கேற்றவர்கள் காந்தியின் புகைப்படத்தையும், காங்., கொடியையும் கையில் ஏந்தியபடி சென்றனர்.
பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுலை, மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி அவதுாறாக விமர்சித்தார். இதுதொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், சுவேந்து அதிகாரி மீது மாநில காங்கிரசார் சார்பில், சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
I know RSS workers are selflessly working for the people unity, Pappu always talk untruth only