உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்; டிரம்ப் ஆலோசகர் கருத்துக்கு இந்தியா பதிலடி

ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்; டிரம்ப் ஆலோசகர் கருத்துக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து, வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் கருத்துக்களை இந்தியா நிராகரித்துள்ளது.ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்து வருகிறார். அவர், 'இதுதான் உக்ரைன் மோதலுக்கு காரணம். ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் சந்தைகளில் இந்தியா ரஷ்ய எண்ணெயை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுகிறது' என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு முக்கியமானது. நவரோவின் தவறான கருத்துக்களை நாங்கள் கண்டோம். வெளிப்படையாக, நாங்கள் அவற்றை நிராகரிக்கிறோம். பீட்டர் நவரோவின் கருத்துக்கள் தவறானது. பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் உறவு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் பார்த்திருப்பீர்கள். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அமெரிக்கா உடனான கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

நோ கமென்ட்ஸ்!

இந்தியாவையும் ரஷ்யாவையும், மோசமான, இருண்ட சீனாவிடம் இழந்து விட்டோம் போலிருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டது குறித்த கேள்விக்கு, ' தற்போது இது குறித்து கருத்து சொல்ல முடியாது' என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !