உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் SJ-100 விமானங்களை தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவின் நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை இன்ஜின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம். இது முன்னர் 'சுகோய் சூப்பர்ஜெட் 100' (SSJ100) என அழைக்கப்பட்டது. இந்த ஜெட் விமானங்களில் 200க்கும் மேற்பட்டவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உலகளவில் 16க்கும் மேற்பட்ட வணிக விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. இந்த விமானம் 103 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. தோராயமாக 3,530 கி.மீ. பறக்கும். இந்நிலையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம்,ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் ரஷ்யாவின் யுனைடெட் ஏர் கிராப்ட் நிறுவனமும் இணைந்து SJ 100 பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்த பயணிகள் விமானம் உள்நாட்டு பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.1988ம் ஆண்டு முடிவடைந்த Avro HS-748 திட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முழுமையான பயணிகள் விமானம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால், SJ-100 திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.வரும் டிசம்பரில் இந்திய-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்னதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் நீடித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக வரி விதித்த போதிலும், இந்தியா ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறது என்பதை இந்த புதிய ஒப்பந்தம் எடுத்துரைக்கிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 22:02

பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு - இந்த செய்தியையும் படிங்க, நெருப்பில்லாம புகையாது என்பார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 21:57

2095 இல் முதல் விமானம் பறந்து கொண்டிருக்கும்.


RAMESH KUMAR R V
அக் 28, 2025 20:32

உண்மையான நண்பன். நட்பு வலுபெறட்டும். வளர்க பாரதம்.


Field Marshal
அக் 28, 2025 19:56

அம்பானி அதானி என்று ஒரு கும்பல் புலம்பும்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2025 21:59

அப்போ கல்யாணி டிபென்ஸ்சா? தேர்தல்நிதி பத்திரம் வாங்கினதை வெச்சி சொல்லி விடலாம்.


cpv s
அக் 28, 2025 18:24

HAL when they release DEJAS MK1A and MK2 Fighter jet, HAL must be privatize then only work move fast track otherwise month salary only go out with out out put result


R. SUKUMAR CHEZHIAN
அக் 28, 2025 18:19

திராவிட கும்பல்கள் குறிப்பாக திமுக தமிழகத்தில் இருக்கும் வரை தமிழதில் புதிய தொழில் வாய்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு, பல புதிய கம்பெனிகள் தமிழக எல்லை அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று விடுகிறன குறிப்பாக ஸ்ரீசிட்டி போல.


Sun
அக் 28, 2025 17:20

அன்றும், இன்றும் என்றும் நமக்கு பழைய சோவியத் யூனியன் இன்றைய ரஷ்யாதான் நமக்கு நம்பகமான கூட்டாளி.


Easwar Kamal
அக் 28, 2025 16:17

இதுவும் எங்கே பெங்களூரு /hyderabada ? இந்தியாவில் தமிழ்நாடு கேரளா எல்லாம் இருக்கு. இப்போ இந்த சுடலை கிட்ட போன 5050 பேரம் பேசுவானுங்க. மத்திய அரசே முன்னெடுத்து சென்றால் ஓடி ஒளிஞ்சுக்குவானுக. பெற பேசுற கம்னாட்டி கூட்டங்கள். இந்த கூட்டம் இருக்கிற வரை தமிழ்நாடு உருப்பட போவது இல்லை. அதற்காக தமிழ்நாட்டை புறம் தள்ளி விட முடியாது.