உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சபரிமலை தங்கம்: மாஜி அதிகாரியை விசாரிக்க கேரள போலீசுக்கு அனுமதி

 சபரிமலை தங்கம்: மாஜி அதிகாரியை விசாரிக்க கேரள போலீசுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்லம்: சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கருவறை கதவுகளில் இருந்து தங்கம் மாயமானதாக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கைது கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு, இரு வழக்குகளையும் விசாரித்து முக்கிய குற்றவாளி உன்னிகிருஷ்ணன் உட்பட ஆறு பேரை கைது செய்தது. துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் பராமரிப்பு பணிகள் நடந்த 2019ம் ஆண்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமாரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பதவிக் காலத்தில் தங்க தகடுகளை, செப்பு தகடுகள் என இவர் மாற்றி எழுதி ஆவணப்படுத்தியதால், கைது செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கோவில் கருவறை கதவுகளில் இருந்து தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பத்மகுமாரை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் இதற்கிடையே சபரிமலை கோவில் தந்திரிகள், கண்டரரு மோகனரரு மற்றும் கண்டரரு ராஜீவரரு அளித்த வாக்குமூலங்களையும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பதிவு செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, ''சபரிமலையில் பணியாற்றியதால், உன்னிகிருஷ்ணன் போத்தியை எனக்கு தெரியும். அவரை சபரிமலைக்கு நான் அழைத்துவரவில்லை,'' என கூறினார். கோவில் சொத்துக்கள் அனைத்தும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பாதுகாப்பில் பத்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி