உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி

சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggk82mn5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கேரள சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையில் சலசலப்பு நிலவியது.மேலும், இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 06, 2025 17:49

தங்கத்தை தானம் செய்தவர் விஜய் மால்யா என்கிறார்கள். NO COMMENTS.


Natchimuthu Chithiraisamy
அக் 06, 2025 17:02

4 KG யார் சொத்து யாருக்கு திருடி வாழ்வார்களா? சாப்பிட கைவரும? வாரிசுகளும் வீணாய் போய் விடுமே


Kasimani Baskaran
அக் 06, 2025 16:49

கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது.


Vasan
அக் 06, 2025 16:02

Central Government should conduct audit in all Temples across India.


SUBRAMANIAN P
அக் 06, 2025 13:34

கேரளாவுக்கு அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டது. சபரிமலை அய்யப்பன் விஷயத்தில் கைவைத்துவிட்டார்கள்.


KRISHNAN R
அக் 06, 2025 13:08

கேரளா திராவிட மாடல் 2...?


Apposthalan samlin
அக் 06, 2025 12:48

பிஜேபி mp கள் குழுவை அனுப்பலாம்


vijay
அக் 06, 2025 12:30

சபரிமலை ஆன்மிக பூமி சந்தேகமே இல்லை ஆனால் அங்கே நடக்கின்ற முறைகேடுகள் வேதனையளிக்கின்றது. பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டாம் உங்கள் பணத்தில் மிகப்பெரிய ஊழலே நடந்து கொண்டுருக்கின்றது .


Sun
அக் 06, 2025 12:25

ஆளும் கட்சி, எதிர்கட்சி இருவருமே கான்களின் ஆதரவாளர்கள். இவர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? எல்லாம் இந்துக்கள் ஓட்டு படுத்தும் பாடு? இவர்கள் இருவரையும் தவிர்த்த நியாயமான புலனாய்வு அமைப்புகள் இதனை விசாரிக்க வேண்டும்.


கோமாளி
அக் 06, 2025 12:25

ஆச்சரியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை