உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்

வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்

சபரிமலை:சபரிமலை பிரசாதம் வீடு தேடி வருவதற்கு தபால் துறையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் ஒப்பந்தம் செய்துள்ளது.சபரிமலை வர முடியாத பக்தர்களின் வேண்டுகோள்படி கடந்த பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை தபால் துறையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்துகின்றன.இதன்படி பிரசாதம் முன்பதிவு இந்தியாவில் எந்த போஸ்ட் ஆபீஸில் இருந்தும் செய்ய முடியும். குறிப்பிட்ட நாளில் வீடுதேடிவரும். ஒரு பிரசாத கிட்டில் அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், மாளிகைபுறத்தம்மன் குங்குமம், மஞ்சள் ஆகியவை இருக்கும்.ஒரு டின் அரவணை அடங்கிய கிட் ரூ. 520, நான்கு டின் அரவணை ரூ. 960, பத்து டின் அரவணை உள்ள கிட் ரூ. 1760 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சபரிமலையில் 39 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. சீசன் தொடங்குவதற்கு முன்னர் 40 லட்சம் டின் ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. சீசன் தொடங்கிய பின்னரும் தொடர்ந்து உற்பத்தி நடப்பதால் ஸ்டாக் அப்படியே தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை