உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டில் இருந்தது போன்ற உணர்வு: பாக்., பயணம் குறித்த சாம்பிட்ரோடா கருத்தால் சர்ச்சை

வீட்டில் இருந்தது போன்ற உணர்வு: பாக்., பயணம் குறித்த சாம்பிட்ரோடா கருத்தால் சர்ச்சை

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை பொறுத்தவரை நமது அண்டைநாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும். நமது அண்டை நாடுகளுடன் உண்மையிலேயே உறவை வளர்த்துள்ளோம். நான் பாகிஸ்தானில் இருந்துள்ளேன். அப்போது வீட்டில் இருந்த போன்ற உணர்வு ஏற்பட்டது. நேபாளம், வங்கதேசத்திலும் இருந்துள்ளேன்.அப்போது எல்லாம், வெளிநாட்டில் இருந்தது போன்ற உணர்வு ஏதும் ஏற்பட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவது போன்று பிட்ரோடா பேசியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

panneer selvam
செப் 19, 2025 20:32

Sam Pitroda is an American Citizen and US agent of Sonia ji family .


SanthaKumar M
செப் 19, 2025 19:21

ஐயா, உங்களுக்கு அவ்வளவு சௌகரியமாக இருந்தால், ஏன் இந்தியாவில் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் அங்கு சென்று வாழ்நாள் முழுவதும் தங்கிவிடுங்கள்.


Rajan A
செப் 19, 2025 21:59

அத்துடன் கட்சிகளையும் கூட்டி கொண்டு போனால் நாடு நன்றி சொல்லும்


A Ramachandran
செப் 20, 2025 07:51

ஆம் ஒரு குடிசையில் வாழ்நாள் முளுதும் அங்கே இருங்க


A Ramachandran
செப் 20, 2025 07:58

பாக்கிஸ்தான் குடிசையில் இருந்து இந்திய துரோகி


Rajan A
செப் 19, 2025 17:59

கான் கட்சி வாய் இப்படித்தான் சொல்லும்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 19, 2025 17:19

வீட்டுக்கே போய்டு


Sundaran
செப் 19, 2025 17:12

காங்கிரஸ் தேசவிரோத கட்சி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது. நாட்டை துண்டுபோட்ட நாசகார கட்சி மீண்டும் மீண்டும் அதையே செய்ய எண்ணுகிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை