உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரம்பிக்குளம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

பரம்பிக்குளம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதி பரம்பிக்குளம். இந்த புலிகள் காப்பகத்தில் உள்ள சுங்கம் வன சரகம் எலத்தோடு கீரப்பாடியில் இருந்தும், நெம்மாரா வன பிரிவின் கொல்லங்கோடு சரகம் தேக்கடியில் இருந்தும், சுமார், 100 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, வனச்சரக அதிகாரி பிரமோத் கிருஷ்ணன் கூறியதாவது:பரம்பிக்குளம் வனத்தில் சந்தன மரம் வெட்டி கடத்துவதாக, கடந்த, 25ம் தேதி தகவல் கிடைத்தது. இச்சம்பவம் ஓணம் பண்டிகை விடுமுறை நாட்களில் நடந்திருக்கலாம் என கருதுகிறோம்.சந்தன மர கட்டைகளை, 15 கி.மீ., வரை கால்நடையாக கொண்டு சென்றுள்ளனர். அதன்பின், தமிழக எல்லைக்கு கொண்டு சென்று, வாகனத்தில் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.சுங்கம் சரகத்தில் இருந்து கடத்திய மரங்கள் எவ்வளவு என்று கணக்கு சேகரித்து வருகிறோம். கொல்லங்கோடு சரகத்தில் வெட்டிய, 21 சந்தன மரங்களில், 6 மரங்களை கடத்தி சென்றுள்ளனர். மீதம் உள்ள சந்தன மரங்களை விட்டு விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ