வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காலிப்பயல்களை மாநில அரசுகள் வளர்த்து விடுவது புதிதல்ல. வானளவு உயர்ந்த தமிழகத்தில் கூட பல் மருத்துவமனையில் பிணவறை கட்டி நோட்டுக்களை பதுக்கி வைத்தார்கள்.
கோல்கட்டா: கோல்கட்டா ஆர்.ஜி.கார் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மனைவி சங்கீதா ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம், 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இம்மருத்துவமனை முதல்வராக இருந்த சந்திப் கோஷ் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தையடுத்து அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார். அவரது வீடு , அலுவலகங்களில் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள் சிக்கின.இந்நிலையில் சந்தீப் கோஷ் மனைவி சங்கீதா, இவரும் ஒரு மருத்துவர். இவர் சட்ட விரோதாமாக ஏராளமான அசையா சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக புகார் கூறப்பட்டது. கடந்த 6-ம் தேதி அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தினர்.இதில் 6 பிளாட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பண்ணை வீடு என அசையா சொத்து ஆவணங்கள் சிக்கின. இவை அனைத்தும் அரசின் ஒப்புதலின்றி வாங்கி குவித்த சொத்துக்கள் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.முன்னதாக சி .பி.ஐ. வழக்கில் சந்தீப் கோஷை செப். 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிப்பயல்களை மாநில அரசுகள் வளர்த்து விடுவது புதிதல்ல. வானளவு உயர்ந்த தமிழகத்தில் கூட பல் மருத்துவமனையில் பிணவறை கட்டி நோட்டுக்களை பதுக்கி வைத்தார்கள்.