உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி கிராம மக்கள் அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி கிராமம் உள்ளது. ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி கிராம மக்கள் அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ‛‛நீதிமன்றம் முழு விஷயத்தையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும். கிராம மக்களுக்கு தேவையான நிதி அரசால் வழங்கப்படும்' என நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

J.V. Iyer
ஏப் 11, 2024 06:12

நீதி அரசர்கள் எப்போது நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள், எப்போது பல்ட்டி அடிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை நல்ல தீர்ப்பு வரும்போது அவர்களை தட்டிக்கொடுக்கவேண்டியது நம் கடமை


sankaranarayanan
ஏப் 10, 2024 20:10

மம்தா பேகத்தின் வலது கைதான் ஷாஜஹான் இவரை தொடவே முடியாது மீறினால் பேகத்தின் எடுபிடி ஆட்கள் பள்ளிவாசலிலிருந்தும் வங்க தேசத்திலிருந்தும் வந்துவிடுவார்கள் ஜாக்கிரதை


rsudarsan lic
ஏப் 10, 2024 19:15

சிபிஐ விசாரணை என்பது தாமதம் செய்யும் உத்தி ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்து அவனை உள்ளே தள்ளி விட்டு விசாரணை கமிஷன் அமைத்தால் என்ன?


தாமரை மலர்கிறது
ஏப் 10, 2024 18:49

திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக இந்த மூணும் பயங்கரவாதிகளை தீனிபோட்டு கொம்பு சீவி வளர்க்கும் கட்சிகள தேர்தல் முடிந்தவுடன், இந்த மூன்று கட்சிகளும் நாட்டின் நலன்கருதி முடக்கப்படும்


Gopalkrishnan GS Secunderabad
ஏப் 10, 2024 18:22

என்ன செய்தாலும் வங்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது சிபிஐ கூட, தஸ்தாவேஜுகளை போலீஸிடம் இதுதான் பெறவேண்டும் அவர்கள் கொடுத்தால்தானே?


A1Suresh
ஏப் 10, 2024 18:03

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதும் பிரச்னை இதுதான்


A1Suresh
ஏப் 10, 2024 18:02

இந்த அநியாயத்தினை ஆதரித்த தவறால் மம்தா தீதி ஆட்சியை இழப்பார்


மேலும் செய்திகள்