உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சங்கூர் பாபா மதமாற்ற விவகாரம்; 14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சங்கூர் பாபா மதமாற்ற விவகாரம்; 14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

மும்பை: மதமாற்ற வழக்கில் சங்கூர் பாபா கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=byh40vsx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்தது.முதலில் மதமாற்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட விசாரணை, தற்போது பயங்கரவாதம், பல நூறு கோடி மோசடி என விதவிதமாக விசாரணை வளையம் விரிந்து கொண்டே செல்கிறது.இந்த நிலையில், சாங்கூர் பாபா மதமாற்ற விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களில் 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் 12 இடங்களிலும், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பந்த்ரா, மஹிம் ஆகிய இரு இடங்களிலும் இன்று காலை 5 மணி முதல் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட நவீன் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஷெஹ்சாத் ஷேக் என்ற நபருக்கு சுமார் 2 கோடி ரூபாய் மாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:35

இவனை கைது செய்து சிறையில் வைத்து மக்கள் வரிப்பணத்தில் சாப்பாடு போடுவது சரியல்ல. ஓடவிட்டு சுட்டுத்தள்ளவேண்டும்.


Kumar Kumzi
ஜூலை 17, 2025 12:28

இவனிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்துவிட்டு....


V Venkatachalam
ஜூலை 17, 2025 12:03

அடப்பாவி இந்த பணத்தை வைத்து கொண்டு என்னடா செய்யப் போறீங்க. நீ செத்து போனபின் இந்த பணம் உன்னோடு வரப்போவதில்லை. உன்னோட சாப்பாடே உன் கையளவு தானே. அதற்கு மேல் உன்னால் எவ்வளவு சாப்பிட முடியும்? பின்னே என்னத்துக்க இந்த கீழமை வேலயை பண்றீங்க.. உனக்கு கடவுளிடமிருந்து மன்னிப்பே கிடைக்காது.


Rathna
ஜூலை 17, 2025 11:20

பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த மூர்க்கன். சவூதி, பெட்ரோலிய நாடுகளின் பணத்தில் பெண்களின் வாழ்க்கையை கெடுத்து உள்ளான்


MARUTHU PANDIAR
ஜூலை 17, 2025 10:48

அந்நிய கைக்கூலிகள் நிறைந்த இந்த "சன நாயக" திருநாட்டில் இவனுகளையெல்லாம் சட்டத்தின் மூலம் என்ன தான் செய்து விட முடியும்? இந்த நாட்டின் செக்கூலர் தலை எழுத்து அப்படீங்கறாங்க.


Arjun
ஜூலை 17, 2025 10:56

ராகுல் கான் கருத்து வரவில்லை மற்றும் திராவிடபாய்ஸ்


புதிய வீடியோ