வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஊழல் மன்னன் கெஜ்ரிக்கு ஜாமீன் வழங்கியது இவர் தானா? கொலிஜிய வாரிசுமுறையில் தான் இவருக்கு பதவி மற்றும் தகுதி புரிஞ் போச்
புதுடில்லி: இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை(நவ.11) பதவியேற்கிறார்.ராஷ்டிரபதி பவனில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று ஓய்வு பெறுவதை தொடர்ந்து, நீதிபதி கன்னா நாளை தலைமை நீதிபதியாக பதவியேற்பார். அவரது பதவிக்காலம் மே 13, 2025 வரை நீடிக்கும்.அக்டோபர் 16 அன்று தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து அக்டோபர் 24 அன்று நீதிபதி கன்னாவின் நியமனத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இருந்த கடைசி வேலை நாளாகும், அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமான பிரியாவிடை அளித்தனர்.சஞ்சீவ் கன்னா கடந்து வந்த பாதை:
மே 14, 1960ல் பிறந்த சஞ்சீவ் கன்னா, முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேவ் ராஜ் கன்னாவின் மகனும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கன்னாவின் மருமகனும் ஆவார்.அவர், டில்லி பல்கலை வளாக சட்ட மையத்தில் சட்டம் பயின்றார்.தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (என்.ஏ.எல்.எஸ்.ஏ) செயல் தலைவராக இருந்தார். அவர் 1983ல் டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.ஜனவரி 18, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மூன்றாம் தலைமுறை வழக்கறிஞராக இருந்தார். ஆரம்பத்தில் இங்குள்ள திஸ்ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களிலும் பின்னர் டில்லி உயர் நீதிமன்றத்திலும் பயிற்சி செய்தார்.வருமான வரித்துறை வழக்கறிஞராக நீண்ட காலம் பதவி வகித்தார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் புனிதத்தை நிலைநாட்டுதல், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்தல், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கல் போன்ற பல முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் ஒரு பகுதியாக, நீதிபதி சஞ்சீவ் கன்னா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மன்னன் கெஜ்ரிக்கு ஜாமீன் வழங்கியது இவர் தானா? கொலிஜிய வாரிசுமுறையில் தான் இவருக்கு பதவி மற்றும் தகுதி புரிஞ் போச்