உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயமா...? எனக்கா...? நெவர் என்கிறார், சித்தராமையா!

பயமா...? எனக்கா...? நெவர் என்கிறார், சித்தராமையா!

மைசூரு: '' எதிர்க்கட்சிகள் தான் என்னை கண்டு பயப்படுகின்றனர். அரசியல் ரீதியாக புனையப்பட்ட வழக்கை கண்டு எனக்கு பயமில்லை,'' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மீது விசாரணை நடத்துவதற்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய கோரி முதல்வர் தாக்கல் செய்த வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும், முதல்வர், அவரது மனைவி, மைத்துனர் மல்லிகார்ஜுனா, நில விற்பனையாளர் தேவராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரு லோக் ஆயுக்தா போலீசுக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக மைசூரு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது: பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் என்னை கண்டு பயப்படுகின்றன. இதனால் தான் என்னை மீண்டும் மீண்டும் குறி வைக்கின்றனர். இந்த வழக்கு அரசியல் ரீதியில் புனையப்பட்டது. எனக்கு பயம் ஏதும் கிடையாது.நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என சொல்லுங்கள். பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் செய்கின்றனர். நாங்கள் அரசியல்சாசனத்திற்கு எதிராக செயல்படவில்லை. வழக்கறிஞர் மூலம் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன்.லோக் ஆயுக்தாவை நாங்கள் மூடவில்லை. பா.ஜ.,வினரால், ' லோட்டஸ் தாமரை'யை செயல்படுத்த முடியவில்லை. இதனால், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். பா.ஜ., அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சித்தராமையா மீது வழக்குப்பதிவு

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா, மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
செப் 28, 2024 06:37

நம்ம உளுத்துப்.போன சட்டங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.


கண்ணன்
செப் 28, 2024 06:31

பல நாள் திருடர்களுக்குப் பயமேது?!


sankar
செப் 27, 2024 21:22

முதல் தகவல் அறிக்கை பதிந்தாகிவிட்டது கோர்ட் உத்தரவுப்படி - ஆக தற்சமயம் இவர் குற்றம் சாட்டப்பட்டவர் - குற்றம் இல்லை என நிரூபிக்கும்வரை பதிவில் தொடர எவ்வித தார்மீக உரிமையும் இல்லை - பதவி விலகுவதே நியாயம் -


என்றும் இந்தியன்
செப் 27, 2024 18:12

பயமா எனக்கா நெவர்????நீங்களே யோசித்துப்பாருங்கள் நீங்கள் காங்கிரஸ் திமுக .......... காட்சிகளில் இருந்தால் ஊழல் கொள்ளை அடிப்பது உங்கள் பிறப்புரிமை அதாவது கட்சியின் அடிப்படை சித்தாந்தம் ஆகவே பயமா என்ன நெவர்???எங்கள் கட்சியின் சித்தாந்தமே ஊழல் கொள்ளை எனப்படும் போது


நிக்கோல்தாம்சன்
செப் 27, 2024 17:50

கருநாடக க்கருணாவை கண்டு எதிர்க்கட்சிகள் தான் பயப்படும் ? ஆஹா ஆஹா ,


sankaranarayanan
செப் 27, 2024 17:27

இவ்வளவு வெளிப்படையான தவறுகளை செய்தபின்பும் சித்து கொஞ்சம்கூட கலங்காமல் எப்படி அய்யா இருக்கிறார் இரும்பு மனம் கொண்டவர் மாபெருந்தவரை செய்விட்டு நானா செய்தென் என்றே கூறிக்கொண்டு ஒன்றுமே தெரியாதாதபோல நடித்து ஆஸ்கார் பரிசுக்கு தேர்ந்தெடுக்கடுவார் மூடா வழக்கு ஒரு கேடாக வந்துவிட்டது சிறிதுகூட முகம் வாடாமல் பாடாய்ப்படுத்துகிறார்


Narayanan
செப் 27, 2024 16:53

வெட்கம் மானம் சூடு சொரணை இருபவனுக்குத்தான் பயமெல்லாம் . நமக்குத்தான் எதுவும் இல்லையே சித்தராமையா


Palanisamy Sekar
செப் 27, 2024 16:37

விழப்போகுகின்ற அடியானது சற்றே பலமாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு இப்போதிருந்தே கருணாநிதியை போல நான் தாழ்த்தப்பட்ட சமூகத்திரிலிருந்து வந்தவன், சூத்திரன், என்றெல்லாம் சொல்லி அழுவது போல சி ராமையாவும் புலம்புகின்றார். அடிமைப்படுத்தப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்களின் கர்நாடக பிரதிநிதி இந்த சித் ராமையா. போகிறபோக்கை பார்த்தால் பார்வதி எனக்கு மனைவி அல்ல, இணைவி என்றோ அல்லது துணைவி என்றோ சொல்லி தப்பிக்க பார்ப்பார். இந்த சித் ராமையா போன்றோர்களால்தான் பாஜகவின் அருமை மக்களுக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. தப்பிக்கவே முடியாது என்கிற இடத்தில இருந்துகொண்டு ஓவென்று புலம்புகின்றார் சித் ராமையா


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 06:15

ஆனால் இவரை பற்றி போட்டுக்கொடுத்தது இவனது கட்சிக்காரன் துணை முதல்வர் தான்


duruvasar
செப் 27, 2024 16:32

பெரிய கௌரவம் சிவாஜி. இந்த மாதிரி வசனம் பேசிவிட்டு நீயும் நானுமா கண்ணா என்று பாட்டு கூட பாடுவார் போல் இருக்கிறது.


Mettai* Tamil
செப் 27, 2024 15:45

பயமா...? எனக்கா...? நெவர் என்கிறார், சித்தராமையா ஆமா , ஊழல் பணம் இருக்கு , கையில் அதிகாரமும் இருக்கு பின் எதற்கு பயம் .......இந்த ஜனநாயக நாட்டில் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை