உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரில் பயணித்து மகிழ்ந்த பள்ளி மாணவ மாணவிகள்; ஆங்கில புத்தாண்டு தினத்தில் நிறைவேறிய ஆசை

காரில் பயணித்து மகிழ்ந்த பள்ளி மாணவ மாணவிகள்; ஆங்கில புத்தாண்டு தினத்தில் நிறைவேறிய ஆசை

மூணாறு; இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு அரசு நடுநிலை பள்ளியில் 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள். இம் மாணவர்கள் காரில் பயணம் செய்தது இல்லை. அதில் பயணம் செய்ய வேண்டும் என்பது இவர்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதனை அறிந்த தலைமை ஆசிரியர் ராஜ், சக ஆசிரியர்களுடன் கார் பயணம் குறித்து ஆலோசித்தார். அதற்கு உதவ மூன்று ஆசிரியர்கள் முன் வந்த நிலையில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கார் பயணத்திற்கு தயாராகினர். அதனால் கூடுதல் நிதி தேவைப்பட்டதால் கார் பயணத்திற்கு உதவ முன்னாள் மாணவர்களும் உதவினர். 22 கார்கள் பயணத்திற்கு தயார் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டிபெரியாறு மினி ஸ்டேடியம் முதல் பள்ளி வரை மூன்று கி.மீ., தூரம் மாணவ, மாணவிகள் காரில் பயணித்து மகிழ்ந்தனர். வண்டிபெரியாறு இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணகுமார் கொடி அசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். கார் பயணத்தை மறக்க இயலாது எனவும்,அடுத்து ரயில், விமானம் ஆகியவற்றில் பயணிக்க ஆசை என மாணவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை