உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்; ஆசிரியர், மனைவி, 2 குழந்தைகள் சுட்டுக்கொலை

உ.பி.,யில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்; ஆசிரியர், மனைவி, 2 குழந்தைகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசம் அமேதியில், பள்ளி ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பள்ளி ஆசிரியர் சுனில் குமார், அவரது மனைவி பூனம் மற்றும் அவர்களது 5, 2 வயதுடைய இரு மகள்கள் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பள்ளி ஆசிரியர் சுனில் குமார், அவரது மனைவி, குழந்தைகள் 2 பேர் உட்பட 4 பேரும் உயிரிழந்தனர்.கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. குற்றத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. விரிவான விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று அமேதி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்க முடியாதது. குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் உத்தரபிரதேச அரசு நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
அக் 04, 2024 16:53

தமிழ்நாடு மாதிரிதான் அங்கேயும் சட்டம் ஒழுங்கு நிலைமை .......


SRISIBI A
அக் 04, 2024 12:33

குற்றவாளிகள் ,அரசியல்வாதிகள் ,அதிகாரிகள், ஊழல்வாதிகள், பணம் மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கு சாதகமாக மட்டுமே இந்தியா அரசியல் மற்றும் தண்டனை சட்டம் உள்ளது. பொது மக்களுக்கென இல்லை.இப்படி பட்ட சட்டம் எழுதிய மோதைய ஏன் கொண்டாடணும்.


அசோகன்
அக் 04, 2024 12:15

யோகியிடம் இருந்து எவனும் தப்ப முடியாது......... உபி ஒன்றும் தமிழ் நாடு அல்ல..... ரவுடிகளுக்கும் கொலையாளிகளுக்கும் அங்கே துளியும் பாதுகாப்பு கிடையாது...... அவர்கள் சாவது உறுதி


ram
அக் 04, 2024 12:04

அமைதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்


ram
அக் 04, 2024 12:04

அமேதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்


ram
அக் 04, 2024 12:04

அமைதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்


vbs manian
அக் 04, 2024 08:58

புல் டோசர் இருந்தும் நடக்கிறது.


sundarsvpr
அக் 04, 2024 08:55

கொலை கண்டிக்க தக்கது. சரியோ தவறோ குற்றவாளி தூக்கிலிடப்படவேண்டும். கொலைக்கு வித்திட்டது யார் என்பது முக்கியம். அவரும் தூக்கிலப்படவேண்டும் இவர்கள் எவ்வாறு சாகிறார்கள் என்பதை பார்ப்பது பாவம். எனவே மிமானத்தில் விமானத்தில் தூக்கிச்சென்று நடு அடர்ந்த காட்டில் அல்லது நடுக்கடலில் தூக்கிஎறியவேண்டும்


rasaa
அக் 04, 2024 09:38

இந்தியாவில் உடனடி தூக்கு தண்டனை சாத்தியமில்லை. நமது சட்டம் குற்றம்புரிபவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. அதுவும் அரசியல் பலம் இருந்துவிட்டால் கவலைப்படவே வேண்டாம். ஆகவே கையில் கிடைத்தவுடன் என்கவுண்டர் செய்துவிடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை