உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்சம் வாங்கியபோது சிக்கிய பெண் பொறியாளர் கதறல்

லஞ்சம் வாங்கியபோது சிக்கிய பெண் பொறியாளர் கதறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : தெலுங்கானாவில், மாநில பழங்குடியினர் நல பொறியியல் துறையில், கே.ஜகஜோதி என்பவர் செயல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், துறை ரீதியான கோரிக்கை தொடர்பாக இவரை ஒருவர் அணுகினார். அப்போது, 84,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் உதவி செய்வதாக, ஜகஜோதி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு அந்த நபர் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ஜகஜோதிக்கு அந்த நபர் அளித்தார்.அப்போது, அதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், ஜகஜோதியை கையும் களவுமாக பிடித்தனர். தான் மாட்டிக் கொண்டதை அறிந்த அவர், தேம்பித் தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.ஜகஜோதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை