உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

ரகசிய ஆலையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை: தொழிலதிபர், சிறை வார்டன் கைது

புதுடில்லி : போதைப் பொருள் தயாரித்து, நாடெங்கும் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆலை, டில்லி அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொழிலதிபர், திஹார் சிறை வார்டன், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ev2k0wv1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லிக்கு அருகே, உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் காஸ்னா தொழிற்பேட்டை பகுதியில் போதைப் பொருள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவதாக, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. டில்லி போலீசின் சிறப்பு பிரிவினருடன் இணைந்து, போதைப் பொருள் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

' மெத் ஆம்பெட்டமைன் '

அப்போது, அங்குள்ள ஒரு தொழிற்சாலையில், 'லேப்' எனப்படும் ஆய்வகம் அமைத்து, 'மெத் ஆம்பெட்டமைன்' எனும் போதைப் பொருள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், டில்லி திஹார் சிறையின் ஜெயிலர் ஒருவர், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:இந்த ஆலையில் போதைப் பொருள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது, 95 கிலோ எடையுள்ள மெத் ஆம்பெட்டமைன் எனும் செயற்கை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தவிர, போதைப் பொருள் தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.பல்வேறு பொருட்களை கலந்து இது போன்ற போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை.இந்த ஆலையை நடத்தி வந்த தொழிலதிபர், ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மெக்சிகோ நபர்

அப்போது, அங்கிருந்த சிறை வார்டன் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவரும் நண்பர்களாக பழகினர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், வார்டனுடன் இணைந்து போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார். இதற்காக, மும்பையில் இருந்து மருந்து தயாரிக்கும் பயிற்சி பெற்ற ஒருவரை தங்களுடன் இவர்கள் சேர்த்துக் கொண்டனர். மேலும் சிலரும் இதில் இணைந்தனர். சோதனையின்போது, தொழிலதிபர், வார்டன் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் இருந்தனர். இதை தவிர, மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவரும் கைது செய்யப்பட்டார்.இந்த ஆலையில் தயாரிக்கப்படும் போதைப் பொருளின் தரத்தை, அந்த மெக்சிகோ நாட்டவர் பரிசோதித்து உறுதி செய்து வந்தது தெரியவந்தது. மெக்சிகோ, போதைப் பொருள் கடத்தலுக்கு புகழ்பெற்றது. அந்த நாட்டில் பல போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றான, சி.ஜே.என்.ஜி., என்றழைக்கப்படும், 'கார்டெல் டி ஜாலிஸ்கோ நுாவா ஜெனரேஷியன்' என்ற அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதில் இருந்து இந்த போதைப் பொருள் தயாரிப்பில், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து போதைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறதா என்பது தொடர்பாகவும், அதில் நடக்கும் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை வரை

இந்தாண்டில் மட்டும் இது போன்று போதைப் பொருள் தயாரிக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்படுவது இது ஆறாவது சம்பவம். குஜராத்தின் காந்திநகர், அம்ரேலி, ராஜஸ்தானின் ஜோத்பூர், சிரோஹி, மத்திய பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் இயங்கிய ஐந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.போபாலில் மட்டும், 907 கிலோ போதைப் பொருள், 7,000 கிலோ ரசாயனங்கள், இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.சமீபத்தில் சென்னையில் வீட்டில் லேப் அமைத்து, போதைப் பொருள் தயாரித்ததாக ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இன்ஜினியரிங் மற்றும் வேதியியல் பட்டப் படிப்பு படித்துள்ள அந்த இளைஞர்களிடம் இருந்து, 245 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த ஆறு தொழிற்சாலைகள், சென்னை இளைஞர்கள் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும், இங்குள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

செலவு குறைவு

இந்த செயற்கை போதைப் பொருள் தயாரிப்பதற்கு மிகவும் குறைந்த அளவே செலவாகிறது. மேலும், தொழிற்சாலை என்ற பெயரில் இதை நடத்தும்போது, யாருக்கும் எந்த சந்தேகமும் எழாது என்பது இவர்களுடைய நம்பிக்கை. ஆலைகளில் ஆய்வுகள் அடிக்கடி நடக்காததும் இவர்களுக்கு சாதகமாக உள்ளது.மேலும், இந்த ஆலைகளில் இருந்து உருவாகும் கழிவுகள், மிகவும் நச்சுத்தன்மை உள்ளவை. அவற்றை முறையாக கையாளாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மெக்சிகோவில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால், நம் நாட்டில் இருந்து தயாரிக்கும் முயற்சியில், போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் உள்ளது.இதனால், தொழிற்சாலைகள் செயல்படும் பகுதிகளில் இது போன்ற போதைப் பொருள் தயாரிப்பு ஆலைகள் மறைமுகமாக அதிக அளவில் இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 30, 2024 23:30

மோடி மாடலில் பிடிபட்டவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த துறைக்கே பெரிய அதிகாரி ஆக்கி அழகு பாப்பாய்ங்க. செபி மாடல். திருடன் கிட்டேயே பூட்டை கொடுத்து அழகு பாத்தாருல்லே .. பாக்குறாருல்லே .


venugopal s
அக் 30, 2024 15:48

வழக்கம் போல் இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் திராவிடர்கள் அல்லது அமைதி மார்க்கம் என்று யாருமே உருட்டவில்லையே!


பாமரன்
அக் 30, 2024 11:14

அதெப்பிடி திமிங்கிலம் இந்த நியூஸ்ல மட்டும் யார் கட்சி யார் முதல்வர்ன்னு போடலை... ம்ம்ம்ம்...


Tetra
அக் 30, 2024 09:30

மதச்சார்பின்மையாக கூட இருக்கலாம்


அப்பாவி
அக் 30, 2024 06:04

சீக்கிரமே போதைப் பொருள் தயாரிப்பில் தன்னிறைவு ஆத்மநிர்பார் அடைஞ்சிருவோம்.


Kasimani Baskaran
அக் 30, 2024 05:34

மெக்ஸிகோவில் இருந்து அயலக அணி உருவாக்கி டெல்லியில் போதைப்பொருள் தயாரிப்பு. மிக மிக கேவலமாக இருக்கிறது.


SANKAR
அக் 30, 2024 07:39

it is in UP. Not in DELHI


பாமரன்
அக் 30, 2024 11:13

காசிக்கு பார்வை மங்கிடிச்சி போல... இவரை போன்ற பழைய பக்கோடாஸ்க்கு குதூகலம் ஏற்றத்தான் பாஜக அரசின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் மாநிலமான உத்திர பிரதேசத்தில் அப்பிடின்னு போடாம டில்லி அருகேன்னு போட்டு தன் கடமையை செஞ்சது மலர்... ஆனாலும் எவ்ளோ முயற்சி செஞ்சி சென்னை பெயரை ஊடால எடுத்து விட்டிருக்காங்க... அதையும் நம்ம காசி கவனிச்சு திராவிஷன்களை திட்டியிருக்கலாம்... ஏஜிங் எபெக்ட் போல... சோ ஸேட்..


chennai sivakumar
அக் 30, 2024 04:53

Singapore / சவுதி மாதிரி தண்டனை கொடுப்பதுதான் சரியான தீர்வு.


J.V. Iyer
அக் 30, 2024 04:16

மாட்டிக்கிட்டது பெரிய இடம்போல இருக்கு. பேர சொல்லாம இருக்காய்ங்க.


JAISANKAR
அக் 30, 2024 04:11

ஏன் சிறை வார்டன் உள்பட. எவருடைய பெயரும் இந்த செய்தியில் குறிப்பிட படவில்லை. போதை பொருள் எங்கி ருந்து வருகிறது தெரிகிறதா? குஜராத் , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி, உத்திர பிரதேசம். அனைத்தும் வடக்கீதான்.


Anand
அக் 30, 2024 11:45

//சமீபத்தில் சென்னையில் வீட்டில் லேப் அமைத்து, போதைப் பொருள் தயாரித்ததாக ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்// இதில் நாம் சளைத்தவர்கள் அல்ல.. ...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 30, 2024 02:12

உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர், டில்லி போலீசின் கட்டுப்பாட்டில், திஹார் சிறை வார்டன், மும்பையில் இருந்து மருந்து தயாரிக்கும் பயிற்சி பெற்ற ஒருவர் . மற்ற தொழிற்சாலைகள் குஜராத்தின் காந்திநகர், அம்ரேலி, ராஜஸ்தானின் ஜோத்பூர், சிரோஹி, மத்திய பிரதேசத்தின் போபால் ஆகிய இறங்களில் உள்ளது. இவர்களுக்கான மூலப்பொருள் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. போபாலில் மட்டும், 907 கிலோ போதைப் பொருள், 7,000 கிலோ ரசாயனங்கள், இயந்திரங்கள் - மற்ற காவி ஆட்சி நடக்கும் ஊர்களில் இன்னும் எத்தனை ஆயிரம் கிலோக்களோ இவைகள் பற்றி எந்த சாங்கியும் வாயை தொறக்க மாட்டான். 100 கிராம் சென்னையில் பிடிச்சதுக்கே பொங்கி எழுந்தவன் எல்லாம் எங்கே இருக்கான்னு தெரியலே. இறக்குமதி பண்ணி, உற்பத்தி பண்றவன் காவிக்கட்சி நாட்டில் இருப்பவன். அங்கேருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி கொண்டாந்து நமது சிறுவர்களை சீரழிக்கிறானுங்க.


பாமரன்
அக் 30, 2024 11:16

நேர்மையான சங்கிமங்கீ யாவாரிங்க வயித்துல மண்ணை போட பாக்கிற ஆன்டி இந்தியன்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை