மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
தெறித்து ஓடும் கை தலைவர்கள்!பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி, தாமரை கட்சியோட கோட்டையா இருக்கு. வர்ற லோக்சபா தேர்தல்ல, அந்த தொகுதிய எப்படியாவது கைப்பற்றணும்ன்னு துணை முதல்வர் சிவா நினைச்சிட்டு இருக்காரு. ஆனா இந்த தொகுதியில போட்டியிட, கை கட்சிக்காரங்க யாரும் ஆர்வம் காட்டலையாம். எவ்வளவு துட்டு செலவழிச்சாலும் தோற்குறது உறுதி. எதுக்கு போட்டியிட்டு வீனா காச செலவு பண்ணனும்னு நினைக்குறாங்களாம். பெங்களூரு தெற்கு தொகுதின்னு சொன்னாலே, தெறிச்சு ஓடுறாங்களாம். இதனால யார நிறுத்துறதுன்னு தெரியாம, துணை முதல்வரு முழிச்சிட்டு வர்றாராம்.இன்னும் ஓயாத சண்டை!சட்டசபை தேர்தல்ல தாமரை கட்சி தோத்து போனதுல இருந்து, முன்னாள் அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்கள் இடையில உரசல் ஆரம்பிச்சி இருக்கு. கட்சி நிகழ்ச்சியில ஒருத்தரு கலந்துகிட்டா, இன்னொருத்தரு வர மாட்டாங்குறாம். புதிய தலைவர் பொறுப்பேற்றதும், சண்டைக்காரங்க மத்தியில சமாதான கொடிய பறக்கவிட நடவடிக்கை எடுத்தாரு. இதுல கொஞ்ச பேரு, சமாதானம் ஆகி இருக்காங்க. ஆனா வடமாவட்டத்துல இன்னும் சண்டை ஓயல. நீயா, நானான்னு பார்ப்போம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் வரிஞ்சி கட்டிட்டு நிற்குறாங்களாம்.காணாமல் போன இப்ராஹிம்!புல்லுக்கட்டு கட்சி, தாமரை கூட கூட்டணி வைச்சதுனால, முன்னாள் தலைவரு இப்ராஹிம், வெகுண்டு எழுந்தாரு. அவர தலைவர் பதவி, கட்சியில இருந்து நீக்குனாங்க. இதனால தொட்டகவுடர் குடும்பத்துக்கு எதிரா, சட்ட போராட்டம் நடத்துறாரு. தொட்டகவுடரை நீக்கிட்டு, இன்னொருத்தர தேசிய தலைவர்னு சொன்னாரு. கொஞ்ச நாளு துடிப்பா இருந்தவரு, இப்போ திடீர்னு காணாம போயிருக்காரு. புல்லுக்கட்டு கட்சியில இருந்த அப்போவும், இப்படி தான் அடிக்கடி காணாம போனாரு. இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago