மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
41 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
48 minutes ago
இன்னும் திருந்தல!சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி, கை கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில, பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிப்போம்னு சொல்லி இருந்தாங்க. அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்துலயே, துணை முதல்வரு சிவா போன ஹெலிகாப்டரு மேல கழுகு மோதுச்சு. இப்போ ராமர் கோவில் திறப்புக்கு பள்ளி, கல்லுாரிக்கு லீவு கொடுக்க மாட்டோம்னு சொல்லி இருக்காங்க. ஒரு தடவ பட்டும் இவங்க இன்னும் திருத்தல. கடவுள் ஏதாவது பெரிசு தண்டிக்க போறார்னு, ஹிந்து அமைப்பினர் சாபம் விட்டுட்டு வர்றாங்க.இந்த அவமானம் தேவையா?புல்லுக்கட்டு கட்சி தலைவரு குமரண்ணரு, கட்சியில தன்னோட தவப் புதல்வனுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்துட்டு வர்றாரு. தாமரை கட்சி தலைகட்டுகள பார்க்க போன அப்போ, மகனையும் அழைச்சிட்டு போனாரு.இந்நிலையில பெங்களூர்ல தாமரை கட்சி முன்னாள் முதல்வரு வீட்டுல, புல்லுக்கட்டுக்காரங்க நேற்று ஆலோசனை நடத்துனாங்க. குமரண்ணரையும், மற்ற தலைவர்களையும் வாசல்ல நின்னு, கை குலுங்கி எதிர்க்கட்சி தலைவரு வரவழைச்சாரு. ஆனா குமரண்ணர் மகன அவரு கண்டுக்கிடவே இல்ல. இந்த அவமானம் தேவையான்னு, கை கட்சிக்காரங்க கிண்டல் அடிக்குறாங்க.என்னென்ன பாடுபடணுமோ?கை கட்சி ஆட்சியில 200 யூனிட், இலவச கரன்ட் கொடுத்துட்டு வர்றாங்க. ஆனா இந்த திட்டத்தால, நிறைய பேருக்கு எந்த பயனும் இல்ல. இந்த திட்டத்துக்கு பதிவு பண்ண போனா, சரியாக ரெஸ்பான்சும் கிடைக்குறது இல்ல. இதுக்கு இடையில கூடுதலா 10 யூனிட், இலவச கரண்ட் தரோம்னு, மின்சார அமைச்சரு சொல்லி இருக்காரு. ஏற்கனவே அறிவிச்சத சரியா கொடுக்க முடியல. இதுல இது வேற. இந்த 10 யூனிட் கரன்டை பெறுவதற்கு என்னென்ன பாடுபடணுமோன்னு, மக்கள் புலம்ப ஆரம்பிச்சி இருக்காங்க.
41 minutes ago
48 minutes ago