உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆலோசனை நடத்தினார்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் முக்கியமானது ராஜஸ்தான். இங்குள்ள ஜெய்சல்மிர் நகரில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டது. அதை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jj6z5xz6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ராஜஸ்தானில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடந்தது. முதல்வர் பஜன்லால் சர்மா தலைமை தாங்கினார்.''எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்'' என முதல்வர் பஜன்லால் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், ராணுவம், விமானப்படை அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும்'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nada Rajan
மே 09, 2025 18:08

ராஜஸ்தானில் பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் இருந்தால் டிரோன்களை எளிதாக சுட்டு வீழ்த்தி விடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை