வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மணிப்பூர் பெண்கள் என்ன achu?
மணிப்பூர்
ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி ????
ராஞ்சி: 'ஜார்க்கண்ட்டில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் உணவு, பெண்கள் மற்றும் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிப்போம்,' என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.ஜார்க்கண்ட் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: நான் மேடையில் பேசும்போது பல்வேறு பெண்கள், மாநிலத்தின் மண்ணை பாக்கெட்டில் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தனர். உணவு, பெண்கள், நிலத்திற்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ., உங்களுக்கு அந்த பாதுகாப்பை உறுதியாக அளிக்கும்.மாநிலத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு, அதற்கு அனுமதி அளிக்கிறது. ஊடுருவல்காரர்கள், இங்கே வேலைவாய்ப்பினை எடுத்துகொள்கிறார்கள், அதனால் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் சோதனைக்குள்ளாகிறது. பா.ஜ., அரசு அமைந்ததும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாப்புக்கு உறுதி அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மணிப்பூர் பெண்கள் என்ன achu?
மணிப்பூர்
ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி ????