1.5 கிலோ ஹெராயின் பறிமுதல்:2 பேர் கைது
சண்டிகர்:பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரண்டு கடத்தல்காரர்களிடம் இருந்து 1.50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:ஆப்கானிஸ்தானின் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ள சுக்தீப் சிங் மற்றும் கிரிஷன் ஆகிய இருவரையும் எஸ்.ஏ.எஸ். நகர் போலீசார் கைது செய்து, 1.5 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.இருவரும் தலைநகர் டில்லியில் முகாமிட்டு போதைப் பொருளை பல மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளனர். சிக்கியுள்ள சுக்தீப் சிங் மீது 2020ம் ஆண்டு ஒரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்த சிங், கடந்த மே மாதம் தான் ஜாமினில் வந்தார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட்டார்.