உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி வழக்கு; தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

செந்தில் பாலாஜி வழக்கு; தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செந்தில் பாலாஜி வழக்கில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு, கடந்த செப்., 26ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ,உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றார். இதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tgrzn913&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'செந்தில் பாலாஜி சாட்சிகளுக்கு அழுத்தம் தந்து, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.இந்த வழக்கு இன்று (டிச.,20) நீதிபதிகள் அபய் எஸ் ஒகா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கில், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனு தாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Bala Subramaniyam
டிச 21, 2024 21:15

ஒர்ஸ்ட் Government


Sankara Subramaniam
டிச 21, 2024 19:30

மத்திய அரசு, நீதிபதிகள் இருவர் மீதும் நம்பிக்கை இல்லை. படித்த வர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும்


Tetra
டிச 21, 2024 13:49

தண்டிக்கப்பட்ட பொன் முடிக்கு ஜாமீன் கொடுக்காமல் தங்கள் விசாரணையை தொடர்ந்திருந்தால் செபாவுக்கு ஜாமீனோட போயிருக்கும். பொன்முடி மந்திரியாக நியமிக்க ஆட்சேபம் தெரிவித்த ஆளுனரை எவ்வளவு மிரட்டி உங்கள் அதிகாரத்திற்கு பணிய வைத்தீர்கள். அதான் இவரும் மந்திரி. கூச்சல் போட்டுஎன்ன உபயோகம். உங்களால் தமிழ்நாட்டு ஆளும் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது


Padmanabhan
டிச 21, 2024 10:51

நாங்கள் எந்த விதமான அடாவடி செயல்களிலும் ஈடுபடுவோம், எங்களை யார் என்ன செய்ய முடியும் என்று தெனாவட்டாக செயல்படும். தமிழக அரசு/ஆளுங்கட்சி. எதையும் கண்டு கொள்ளாத மத்திய அரசு. இவற்றை கவனித்து பயந்து நடுங்கும் நீதித்துறை அவர்களும் நம் தமிழகத்தில் பயத்துடன் வாழ்பவர்கள் தானே?. ஆனால் ஆரம்பம் என்று ஒன்று இருக்கும்போது முடிவு என்ற ஒன்றும் வருவது நிச்சயமான இயற்கை விதி. கடவுள் நிச்சயம் உரிய நேரத்தில் முடிவுரை எழுதுவார். ஆனால் எப்போது? காத்திருப்போம்.


D.Ambujavalli
டிச 21, 2024 06:51

‘அய்யா, சாமி, நாங்க கேட்ட விவரங்களைக்கொடுத்துடுங்கப்பா ‘ என்று கெஞ்சவில்லை உச்ச நீதிமன்றம் அப்படி இப்படி ஒண்ணரை வருஷத்தை ஒட்டிவிடுவோம் 2026 தேர்தலுக்கு இந்த ‘வள்ளல்’ கையைத்தானே எதிர்பார்க்கிறோம் என்ன, இன்னும் எட்டு முறை கோர்ட் அதிருப்தியை, வருத்தத்தை தெரிவித்துக்கொண்டிருக்கட்டுமே


venkatapathy
டிச 21, 2024 06:26

எந்த நீதிமன்றமோ மத்திய அரசோ வெறும் உருட்டல் உருட்டலாமோ தவிர என்ன செய்யமுடியும் எங்கள் விடியல் ஆட்சி இவர்களுக்கு எல்லாம் மேலானது முதல்வரே சொல்லி இருக்கார் செந்தில் பாலாஜியை தொட்டால் தெரியும்.ஒன்றுமே நடவாது எல்லாம் திருடன் அதுல ஒருத்தனமாத்திரம் குத்தம் சொன்னா எப்படி ?


Mani . V
டிச 21, 2024 05:45

எப்படி வரும்? ஊழல் பேர்வழியை மந்திரியாக நியமித்து வைத்துள்ள ஊழல் பேர்வழிகள் எப்படி கொடுப்பார்கள்? மக்களின் வரிப்பணம் விரயமாவது ஒன்றுதான் நடக்கிறது. இவர்களுக்கெல்லாம் வட கொரிய அதிபர் பாணியில் தண்டனை கொடுக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
டிச 21, 2024 05:32

இங்கே முதல்வர் ஸ்டாலினா இல்லை செந்தில் பாலாஜியா ? நிழல் முதல்வர் செந்தில் பாலாஜி மீது இவ்ளோ கரிசனம் காட்டும் அளவிற்கு ஸ்டாலின் அப்படி என்ன செய்து சிக்கி கொண்டுள்ளார் ?


Rajarajan
டிச 21, 2024 05:09

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அதை தமிழக அரசு பின்பற்றவில்லையெனில், ஆட்சியை கலைப்பதில் தவறில்லை. ஆனால், நீதிமன்றமே வெறும் வருத்தத்தை பதிவு செய்தால், சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும் ?


RAJAKUMAR PT
டிச 20, 2024 23:18

இதே பாமர மக்களாக இருந்தால் இந்நேரம் கைது செய்திருப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை