உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: ஆக.,5க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: ஆக.,5க்கு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சில கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்காமல் இருந்த நிலையில் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இன்று (ஜூலை 25) வழக்கை ஒத்திவைத்தது.ஆனால், இன்று வழக்கு, விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் நீதிபதி அபய் எஸ்.ஓஹா முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி முறையிட்டார். பின்னர், செந்தில் பாலாஜி வழக்கு ஆக.,5ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 26, 2024 05:26

சின்ன அணிலு சிக்கும் வரை ஜாமீன் கிடையாது செந்திலு.


Jay
ஜூலை 25, 2024 21:03

இவரின் தம்பி சரண்டர் ஆகவில்லை என்றால் எப்படி ஜாமீன் கிடைக்கும்? தொடர்ந்து ஜாமீன் கேட்பது என்ன நாடகம் என்று தெரியவில்லை.


R Sriram
ஜூலை 25, 2024 15:51

எழுபது வயது தாண்டிய பிறகு வந்தால் போதும்


அஜய் சென்னை இந்தியன்
ஜூலை 25, 2024 13:28

இவனை ஜாமீன் கொடுத்து வெளியே விடுவது தவறு


கனோஜ் ஆங்ரே
ஜூலை 25, 2024 13:26

செய்யுங்கடா... செய்யுங்க...? உங்களாலே எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய்யுங்க...? “கத்தி எடுத்தவன் கத்தியில்தான் சாவான்”...ன்னு ஒரு பழமொழி இருக்கு...மறந்துடாதீங்க...


Duruvesan
ஜூலை 25, 2024 14:51

மூரக்ஸ் விடியல் போட்ட கேஸ் என்னமா வேலை செய்யுது


Ramanujadasan
ஜூலை 25, 2024 15:38

கொள்ளை அடிக்கும் திமுக எதனால் அழியும் ?


vee srikanth
ஜூலை 25, 2024 12:55

தம்பி எங்கே ???


மேலும் செய்திகள்