உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு

வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வாலை சந்தித்து பேசினார்.வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 5 கட்டங்களாக பேச்சு நடந்த நிலையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பு செயலால் அதிருப்தியடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இது அதிபர் டிரம்ப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக ஒப்பந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.அதன்படி, அமெரிக்க பிரதிநிதிகள் அடங்கிய குழு இந்தியா வந்து, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இன்னமும் இந்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வாலை டில்லியில் சந்தித்து பேசினார். 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மேலாண்மை மற்றும் வள ஆதாரங்களுக்கான துணை செயலாளர் மைக்கேல் ஜே ரிகாஸூம் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். அப்போது, இந்தியா - அமெரிக்க பொருளாதார உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N.Purushothaman
அக் 13, 2025 13:40

இவனுங்களுக்கு முன்னாடி ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விடும் என தெரிகிறது ...


Ramkumar Ramanathan
அக் 13, 2025 10:21

good answers.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை