சேவை குறைபாடு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டிஜிசிஏ நோட்டீஸ்
விமானங்கள் ரத்து, இயக்குவதில் பிரச்னை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டு ஸ்பைஸ்ஜெட் றுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நவம்பர் 17 ம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீசில், குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்காதது, தாமதமாகும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ரத்து செய்வது குறித்து விளக்கமளிக்கும்படி கூறியுள்ளது.இந்த நடவடிக்கைகளினால் பயணிகளுக்கு பிரச்னை மற்றும் காலதாமதம் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ள டிஜிசிஏ 7 நாட்களுக்குள் விளக்கமளிக்கும்படி கூறியுள்ளது.