உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் பதுங்கி இருந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 7 ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் பயங்கரவாதிகள் அல்-பதர் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=50xvbxp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானின் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டது. பிப்ரவரி 4,5ம் தேதிகளில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.சமீபத்திய மாதங்களில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 21:37

பதர் ஆஹா என்ன பெயரடா , ஆமா இந்த பதறுக்கு உங்கள் வெளிநாட்டு மொழியில் என்ன அர்த்தம்


Pandi Muni
பிப் 07, 2025 17:08

வங்க தேச எல்லையிலும் நமது ராணுவம் ஊடுருவல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் நம் தேசம் உருப்படும்


Rajan A
பிப் 07, 2025 17:06

நல்ல வேளை அமெரிக்கா நம்ம ஊர் ஆளுங்கள இப்படி பண்ணவில்லை. இதுக்கே இவ்வளவு கூக்குரல். ராவுல் வின்சி விளாயாட்டு புள்ள. இன்னிக்கு பாண்டியா, கில்லியானு காலைல முடிவெடுப்பார். நாட்டுக்கு நல்லது பண்ண யோசிக்க மாட்டார்


Sampath Kumar
பிப் 07, 2025 16:40

படை உள்ளது ஏன்பதை அப்போ அப்போ காட்டும் செய்தி போல உள்ளது உண்மையில் ஊடுருவல் நடக்கிறதா ? என்று தெரியவில்லை செய்தியும் ஊர்ச்சித்தப்படுத்த வில்லை வெண்டைக்காய் செய்தான் போல


Anand
பிப் 07, 2025 18:39

மூர்க்ஸ், வேண்டுமானால் நீ பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி பார்த்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்....


முக்கிய வீடியோ