உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எளிதாக நீதி கிடைக்க நடவடிக்கை; நீதித்துறை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் பெருமிதம்

எளிதாக நீதி கிடைக்க நடவடிக்கை; நீதித்துறை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அனைவருக்கும் எளிதான முறையில் நீதி கிடைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை, சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நான் முன்பே கூறியது போல், வணிகம் செய்வதை எளிதாக்குவதும், வாழ்க்கை முறையை எளிதாக்குவதும் நீதியின் எளிமை உறுதி செய்யப்படும்போதுதான் சாத்தியமாகும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m4oj3xpd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சில ஆண்டுகளில் நீதியை மேலும் எளிதாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இது மேலும் விரைவுபடுத்தப்படும். இந்த அரசு முயற்சிகள் நாட்டின் ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நீதியை உறுதி செய்துள்ளது. சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சம் குற்ற வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.தொழில்நுட்பம் மறுக்க முடியாத வகையில் ஒரு சீர்குலைக்கும் சக்தியாகும். ஆனால் அது மக்கள் சார்புடையதாக இருந்தால், அது ஜனநாயகமயமாக்கலுக்கான கருவியாக மாறும். ஒரு ஏழை தனது உரிமைகள் குறித்து அறிந்துகொள்ளும் வரை நீதியைப் பெற முடியாது. அதனால்தான், ஏழைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது முன்னுரிமையாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி விக்ரம் நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kalyanaraman
நவ 09, 2025 08:35

செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகள் பெயிலிலேயே தன் வாழ்நாளை கடத்தி விடுகிறார்கள். கடந்த 30 வருடங்களில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றினாலும் ஒருவருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. நமது நீதித்துறை தனது தாமதமான விசாரணையால் / தீர்ப்பால் குற்றவாளிகளையும் குற்றங்களையும் ஊக்குவிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சாபக்கேடு. நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக எரிந்த பணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.


Kasimani Baskaran
நவ 09, 2025 07:11

ஏராளமான அளவில் மனிதவளம் இருந்தும் இந்திய நீதித்துறை வேலையை செய்வதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் செய்யும் அட்டூழியம் எல்லையில்லாதது. 99/100 வழக்குகளில் கீழ் கோர்ட் சொல்லும் தீர்ப்பு மேல் கோர்ட்டில் மாற்றப்படுகிறது. இரண்டும் ஒரே சட்டத்தின் அடிப்படையில். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நீதிபதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.


Gajageswari
நவ 09, 2025 05:32

தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி


V GOPALAN
நவ 09, 2025 00:18

உச்ச நீதிமன்றம் சன் பேமிலிக்கு முக்கியம் கொடுக்ககூடாது


V Venkatachalam, Chennai-87
நவ 08, 2025 20:07

சூப்பர் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்புகளை பார்த்து நாங்க வெந்து நொந்து போய் இருக்கிறோம்.


முக்கிய வீடியோ