உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்; சத்தீஸ்கர் இளைஞர் கைது

சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்; சத்தீஸ்கர் இளைஞர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல், ஹிந்தி முன்னணி நடிகர் சல்மான் கானையும் கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது. இதைத் தொடர்ந்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சல்மான் கானுக்கு அவ்வப்போது மிரட்டல் வருகிறது. அக்டோபர் 28ம் தேதி 2 கோடி ரூபாய் கேட்டு, மிரட்டல் விடுத்த நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.இதற்கிடையே மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையின், 'வாட்ஸாப்' எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், மானை வேட்டையாடி கொன்ற வழக்கில், சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது எங்களுக்கு 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சல்மான்கானை கொலை செய்வோம்' என மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக , கர்நாடகாவின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், சல்மான் கானைப் போன்றே ஹிந்தி முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கும் மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அழைப்பு வந்த செல்போன் எண் சிக்னலை வைத்து அந்த நபரை தேடினர். பின்னர், சத்தீஸ்கரில் இருந்து மிரட்டல் விடுத்த பைசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rasheel
நவ 07, 2024 18:07

அமைதி வழிகாரனுக்கு அவன் வகுப்பை சேர்ந்த மர்ம நபரே மிரட்டல் விடுவது வேடிக்கை.


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 17:11

மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் திறமையின்மையைக் காட்டுகிறது. இதுவே பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் என்றால் இப்படிதான் சொல்வார்கள்.


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 14:48

சாம்பிராணி தண்டால் ஏவல் ஆட்கள் எவன் ஏமாறுவான் என ஓவர் டயம் போட்டு யோசிச்சு கல்லா கட்ட நினைக்கிறான் . யாரையாவது மிரட்டி பணம் பறிக்கனும் இல்லாங்காட்டி எங்கயாவது குண்டுவைக்கணும் . என்ன டிசைனோ இந்தமாதிரி ஆட்களின் முழுநேர வேலை அசிங்கத்தின் உச்சம் .


சமீபத்திய செய்தி