உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சியை காங்கிரசுடன் இன்று இணைக்கிறார் ஷர்மிளா ?

கட்சியை காங்கிரசுடன் இன்று இணைக்கிறார் ஷர்மிளா ?

ஐதராபாத்: ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளா இன்று தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சி தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது போவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என அறிவித்தார். இதையடுத்து தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடித்தது, பாரதிய தெலுங்கானா கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. இது ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து தனது கட்சியை காங்கிரஸ் இணைக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venkatakrishna
ஜன 06, 2024 14:37

ஷர்மிளா விவரம் தெரியாதவர். இந்த இணைப்புக்குப் பிறகு, சந்திரசேகர ராவ் பிஜேபியுடன் கூட்டணி வைத்து இப்போதிருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்


ராஜ்
ஜன 04, 2024 08:06

ஆமென்


Nandakumar Naidu
ஜன 04, 2024 08:02

0 ....


sankaranarayanan
ஜன 04, 2024 05:43

எல்லாமே சூழ்ச்சிதான் எப்படியாவது ஆந்திராவில் உள்ள சகோதரனுக்கு போட்டியாக தெலுங்கானாவில் தான் ஓர் அமைச்சராகா ஆகிவிட வேண்டுமென்பது இவரின் நோக்கம் வெற்றி பெறட்டும் நிச்சயம் கிட்டும் பிறகு தெலுங்கானா முதல்வாராக்கூட திட்டம் உள்ளதாம் வெற்றிபெறுவார் ராவை ராவோடவே விரட்டி அடிப்பார்


Ramesh Sargam
ஜன 04, 2024 01:53

ஷர்மீளா, ஒரு பிழைக்க தெரிந்த அரசியல்வாதி. ஆமாம், கட்சி தாவல் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே.. அதெல்லாம் சும்மா பெயரளவில்தானா..? இப்படி தங்கள் சுயநலத்துக்காக அடிக்கடி கட்சி மாறுவதும், கட்சியை இணைப்பதும் செய்பவர்களை அந்த சட்டம் ஒன்றும் தடுக்காதா...? அப்புறம் எந்த 'இதுவுக்கு' அந்த சட்டம்?


மேலும் செய்திகள்