உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுடன் கருத்து வேறுபாடு: சசி தரூர் ஒப்புதல்

காங்கிரசுடன் கருத்து வேறுபாடு: சசி தரூர் ஒப்புதல்

திருவனந்தபுரம்: '' காங்கிரஸ் கட்சி மேலிடத்துடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு கண்டனம் தெரிவித்தாலும், விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wp869fp4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 ' ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றார். அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வருவது காங்கிரசுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், சசிதரூரை கண்டித்தனர்.இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிலம்பூர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளாதது தொடர்பாக சசி தரூர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது: கேரள மாநிலம் நிலம்பூர் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் என்னை அழைக்கவில்லை. எனக்கும், கட்சி தலைமைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றை மூடிய கதவுக்குள் சரி செய்து கொள்ள முடியும். ஆனால், இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றதால், வெளிநாடுகளுக்கு சென்றேன். திரும்பி வந்த பிறகு, பிரசாரத்திற்கு வர வேண்டும் என கட்சியினர் யாரும் என்னை அழைக்கவில்லை. கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசில் உள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடனான எனது உறவு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Manaimaran
ஜூன் 20, 2025 03:41

விற்பனைக்கு தயார் வாங்குவாரில்லை


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 20:34

சசி விரைவில் பிஜேபியில் ஐக்கியமாவார்.


Ramesh Sargam
ஜூன் 19, 2025 21:04

அவர் ஏற்கனவே மனசு ரீதியாக ஐக்கியமாகிவிட்டார்.


sankaranarayanan
ஜூன் 19, 2025 18:23

இருவருமே "சி என்ற சொல்லில்தான் பெயர் ஆரம்பம் ஆனால் ஆட்சியில் "சீ" என்றே இருவருக்கும் போய்விட்டது இனி என்ன அடுத்து பிஜேபிதான் அங்கே ஆட்சி அமையப்போகிறது


subramanian
ஜூன் 19, 2025 17:34

சசி தரூர் சார், நீங்கள் உங்கள் கருத்துப்படி எது சரி என்று நினைத்து செயல்பட வேண்டும். வருத்தம் இருந்தால் வெளியே வந்து விடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை