உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழிக்கு வாய்ப்பு; காங்., பரிந்துரை நிராகரிப்பு

பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழிக்கு வாய்ப்பு; காங்., பரிந்துரை நிராகரிப்பு

புதுடில்லி: பயங்கரவாத்தை ஆதரித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் நிலையை உலகிற்கு எடுத்து சொல்ல பிரதமர் மோடி, எம்.பிக்கள் கொண்ட குழுவை அமைக்க உள்ளார். இந்தக்குழுவிற்கு காங்கிரசை சேர்ந்த எம்.பி., சசிதரூருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல அரசியல் கட்சியின் எம்பிக்கள் இடம்பெற உள்ளனர். இதில் தமிழகத்தில் தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி எம்.பி.,க்கும் இடம் தரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. அரசியல் பாரபட்சம் இன்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.இந்த அணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள எம்பி.,யுமான சசி தரூர் தலைமை தாங்குவார். இவர் மத்திய அமைச்சராக இருந்து ஐ.நா.விலும் பணியாற்றியுள்ளார், அவரது அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச பிரசாரத்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட அணியின் கட்டுப்பாட்டை அரசு அவரிடம் ஒப்படைத்துள்ளது.சசி தரூர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சென்று பாகிஸ்தானின் சதித்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே ஒரு கருத்தை உருவாக்குவார் என்று கூறப்படுகிறது.குழுவின் மற்ற உறுப்பினர்கள் உலகின் பிற நாடுகளுக்குச் சென்று பாகிஸ்தானின் பயங்கரவாத நிலையை அம்பலப்படுத்துவார்கள்.

எடுத்து வைக்கப்படும் கருத்துக்கள்

01. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது என்பதை எடுத்து கூறுவர். ஐ.நா மற்றும் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.02. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனிரின் குழுவில் ஒசாமா பின்லேடனின் கூட்டாளியின் மகன் இடம்பெற்றுள்ளார். இது பயங்கரவாதிகளுடனான இஸ்லாமாபாத்தின் உறவை எளிதில் விளக்குகிறது.03. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் குறித்து கேட்டு படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்து சுற்றுலாப் பயணிகள். இந்த விவரம் எடுத்து வைக்கப்படும். பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீரில் நடந்த கொடூரமான சம்பவத்தை விளக்குவர்.

7 மண்டலங்களாக பிரிப்பு

01. அமெரிக்கா, 02. ஐரோப்பிய ஒன்றியம் 03. தென்கிழக்கு ஆசியா, 04. மத்திய கிழக்கு நாடுகள்,05. ஆப்பிரிக்கா, 06. ஆஸ்திரேலியா, 07. பிரிட்டன் என பிரிக்கப்பட்டுள்ளன.

10 நாடுகளுக்கு

40 எம்பி.,க்கள் கொண்ட 7 முதல் 8 குழுக்களாக செயல்படுவர். 10 நாடுகளுக்கு இந்த குழு சென்று பாகிஸ்தானின் முகத்திரையை அம்பலப்படுத்தும். மே 23க்குள் இந்த குழு வெளிநாடுகளுக்கு கிளம்பி செல்லும்.இந்தக்குழு தொடர்பாக அரசு தரப்பில் எம்பி.,க்கள் பட்டியல் ஏறக்குறைய தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, காங்கிரஸ் பொது செயலர் ஜெயராம் ரமேஷிடம் பேசி உள்ளதாகவும் தெரிகிறது.மணீஷ்திவாரி, சல்மான்குர்ஷீத், அமர்சிங், அனுராக்தாக்கூர், கனிமொழி, ரவிசங்கர் பிரசாத், சமிக் பட்டாச்சார்யா, புரந்தேஸ்வரி, எஸ்.எஸ். அலுவாலியா, ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஓவைசி, சுப்ரியா சுலே, அபரஜித்தா சாரங்கி, மற்றும் பல எம்,பிக்கள் இடம்பெறுவர்.

காங்கிரஸ் கேட்டது யாருக்கு ?

இதற்கிடையில் மத்திய அரசு தயாரித்து வரும் வெளிநாடு செல்லும் குழுவிற்கு எம்பிக்கள் பட்டியலில் காங்கிரஸ் தரப்பில் 4 பேர் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. காங்., பொதுசெயலர் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பரிந்துரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, லோக்சபா காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய், ராஜ்யசபா எம்பி., சையீது நாசர் உசேன், லோக்சபா எம்.பி., ராஜாபிரார் ஆகிய 4 பேர் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதில் பட்டியலில் இல்லாத சசிதரூர் தேர்வு செய்யப்பட்டார்.7 குழுக்கள் தலைவர்கள் யார் ? பார்லி., விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண்ரிஜ்ஜூ வெளியிட்டுள்ள பதிவில்; 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவிற்கான 7 தலைவர்கள் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். இதன்படி : சசிதரூர் (காங்கிரஸ்) , ரவிசங்கர் பிரசாத் (பா.ஜ.,), சஞ்சய்குமார் ( ஐக்கிய ஜனதாதளம்), பைஜெயந்த் பண்டா (பா.ஜ., ), கனிமொழி ( தி.மு.க.,), சுப்ரியா சுலே (தேசிய வாத காங்கிரஸ்) , ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ( சிவசேனா) . இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரத ஒற்றுமை

மிகவும் முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்ற நமது செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு இது . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

S.V.Srinivasan
மே 21, 2025 09:07

கனி அக்கா பாக்கிஸ்தான் தோலை உரித்து காட்டக்கூடிய ஆளு இல்லையே. அங்க போய் குட்டைய குழப்பாமா வந்த சரி.


மீனவ நண்பன்
மே 18, 2025 10:34

மம்தா பேனர்ஜி கேஜரிவால் ரெண்டு பேரையும் குழுவில் சேர்த்திருக்கலாம்


Anantharaman Srinivasan
மே 18, 2025 00:37

பாகிஸ்தானுக்கு வால் பிடிக்கும் திராவிட கட்சிக்கு எதுக்கு இந்த கூடாரத்தில் இடம்..?


Ragupathi
மே 18, 2025 06:21

அவர்களுடைய தேசபக்தியை பரிசோதிக்கத்தான். -


venugopal s
மே 17, 2025 22:01

இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய பாஜக அரசின் முயற்சி இது!


மீனவ நண்பன்
மே 18, 2025 10:29

ராஜா பத்தி சொல்லலியே


நிமலன்
மே 17, 2025 21:10

நாட்டிற்கு எதிரி கட்சிகளாக செயல்படும் இவர்களை அனுப்பி பாகிஸ்தானை பற்றி பேச சொல்வதில் உள்ள தந்திரம். அடேங்கப்பா. இவர்கள் மறுத்தால் இப்போதே சாயம் வெளுத்து விடும். மோடிஜி கொடுத்த assignment படி அந்த பக்கி நாட்டை பற்றி வெளிநாடுகளில் பேசி விட்டு இங்கே வந்த பிறகு அமைதி மார்க்கத்தினர் மூஞ்சியில் எப்படி முழிப்பது. அங்கு பேசிய பேச்சுகளுக்கு இங்கு மாறுப்பு தெரிவிக்கவும் முடியாது. பிஜேபி IT wing வெச்சு செய்து விடுவார்கள். நம்ம கனியம்மா ஜாதகத்தில் சனி நேரடி பார்வையில் இருக்கிறார் போல.


Suresh Velan
மே 17, 2025 22:22

நம்ம கணியம்மா தமிழக முதலமைச்சரை பற்றி பேசுவாங்க , அதோடு திராவிடம் பற்றி கொஞ்சம் தெரியும் ,தேசியம் பற்றி தெரியாதே , இவங்க பேச்சை உள்ளூர் காரங்களே போர் என்று கேட்பதில்லை , எப்படி தேச பக்தியை வரவழைத்து கொண்டு பேசுவார்களோ .....?


Suresh Velan
மே 18, 2025 14:37

கனி போறதை பற்றி தமிழக முதலமைச்சர் சுடலை வாய் திறக்கவில்லை. சென்று வென்று வருக என்று சொல்வாரே, என்ன ஆச்சு, போ என்றும் சொல்லவில்லை, போக வேண்டாம் என்றும் சொல்லவில்லை. திருட்டு திராவிட அமைச்சர்கள், திருட்டு திராவிட கண்மணிகள் கனி போறதை பற்றி வாய் திறக்கவில்லை. சரி, அதை விடுங்க, கனியாவது மோடியை பாராட்டாவிட்டாலும், எனக்கு இப்படி போவது பெருமை அளிக்கிறது, இந்தியாவை நான் உயர தூக்கி பிடிப்பேன் என்று ஒரு ஜெனரல் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கலாம், அதையும் செய்யவில்லை, இடிச்ச புளி மாதிரி வாய் திறக்கவில்லை. இந்த கனிக்கு வாய் கிழியுமே, ஏன் வாய் திறக்கவில்லை. இவங்க எல்லாம் போய்...


SIVA
மே 17, 2025 20:32

இவங்கள எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்க மாதிரி தெரியலயே என்று ஒரு வசனம் வரும் ....


Ramesh Sargam
மே 17, 2025 20:17

இவர்களை நம்பி அங்கே அனுப்புவது சரியா?


Suresh Velan
மே 17, 2025 22:25

எங்க கஷ்டப்பட்டு போர் செய்வது ஒருத்தர் , உல்லாச பயணம் போவது இன்னொருத்தரா ? இது என்ன நியாயம் .


தத்வமசி
மே 17, 2025 19:33

ஜாலியாக ஒரு டூர் எதிர்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு. இவர்களின் வேலையை திருவாளர் ஜெய்சங்கர் ஐயா எப்போதோ செய்து முடித்து விட்டார். இது உலகுக்காக அல்ல எதிர்கட்சிகளுக்காக. இவர்களின் நடவடிக்கை, ஒவ்வொரு அசைவும் இப்போது கண்காணிக்கப்படும்.


spr
மே 17, 2025 17:28

மோடியைப் பாராட்டுவோம் சரியான ராஜ தந்திரம் இது போல சில விளம்பரப் போரையும் நடத்தியாக வேண்டும். இப்படியெல்லாம் செய்து மோடிக்குப் பின் நம் நாட்டை முன்னிலைப்படுத்த முன்னெடுத்துச் செல்ல இப்படியொரு திறமையான மனிதர் கிடைக்க வேண்டுமே என்றொரு எண்ணத்தையம் தவிப்பையம் உண்டாக்குகிறார். எதிர்க்கட்சிகளுக்குத் தங்கள் நாட்டுப்பற்றைக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு. போகிற இடத்தில் நம் நாட்டின் மனத்தைக் காப்பாற்ற வேண்டும் ஆயுதம் ஏந்துவது மட்டுமே போருக்கான வழியல்ல என்று உலகிற்கு ஒரு புதிய உத்தியைக் காட்டுகிறார். பேனா கத்தியை விட வலிமை உள்ளது என்பதால், இதே போல எழுத்திலும் நம் நிலையை வெளிப்படுத்த ஒரு குழுவை அமைக்கலாம் இதனைஸ் சரியாகச் செய்யவில்லையென்றால் அதற்கும் ஏதேனும் ஒரு வழியை வைத்திருக்க வேண்டுமே


ஆரூர் ரங்
மே 17, 2025 16:26

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அயல்நாடுகளில் உள்ள இந்திய தூதர் அலுவலகங்களில் ஹிந்திப் பயன்பாட்டை அதிகரிக்க எம்பி க்க‌ள் குழுக்களை அரசு அனுப்பியது. அதில் திராவிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தவறாமல் பங்குகொண்டு உல்லாசமாக பயணம் செய்து பரிசுப் பொருட்களுடன் திரும்பி வருவது வழக்கம். இப்போதும் கைநிறைய கிடைக்கும் என்றால் பறக்க தயார். கொள்கையாவது மண்ணாவது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை