உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி.,க்கள் பயணத்தில் நல்ல முடிவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி

எம்.பி.,க்கள் பயணத்தில் நல்ல முடிவு கிடைத்தது: சசி தரூர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எம்.பி.,க்களின் வெளிநாட்டு பயணத்தில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம் அனைத்து இடங்களிலும் நல்ல முடிவு கிடைத்தது. இந்தியாவின் நிலைப்பாடு குறித்த முழுமையான புரிதல் இருந்தது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் உள்ள நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துவிட்டு டில்லி திரும்பியுள்ள காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கூறியதாவது: இந்த பயணம் சிறந்தது. அந்த நாடுகள் அளித்த வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். அனைத்து இடங்களிலும் எங்களுக்கு சிறந்த முடிவு கிடைத்தது என்ற நம்பிக்கை உள்ளது. அதிபர்கள், பிரதமர்கள், அறிஞர்கள் என உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினோம்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு நடந்தவற்றை புரிந்து கொண்டு நமக்கு ஆதரவு அளித்தனர். நமது பதிலடியில் நாம் காட்டிய கட்டுப்பாட்டை அறிந்து நமக்கு மரியாதை கொடுத்தனர். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 07:10

இதை அப்படியே தமிழ்நாட்டை ஆளுவோரிடமும் ..பாபுவிடமும் சொல்லுங்கள்...


Kasimani Baskaran
ஜூன் 11, 2025 04:06

அருமை. தேசம் என்று வந்தால் அதிலும் முன்னால் நிற்க காங்கிரசில் கூட ஒரு சிலர் உண்டு என்பது மட்டற்ற மகிழ்ச்சி.


xyzabc
ஜூன் 11, 2025 02:48

Good job Tharoor sir. Good initiative by pm modi ji for involving all the opposition parties including Kani akka. Sticker opportunity for dmk.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை