உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் சசி தரூர்!

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் சசி தரூர்!

திருவனந்தபுரம்: ''நான் கட்சிக்கு பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், கட்சிக்கு அதில் விருப்பமில்லை எனில், எனக்கு வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன,'' என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி., யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து நான்காம் முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்தவர். மனதில் பட்டதை நேர்மையாக பேசக்கூடியவர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், கேரளாவில் எல்.டி.எப் அரசாங்கத்தையும் புகழ்ந்து பேசினார். இதை கட்சித்தலைமை ரசிக்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. மாநில காங்கிரஸ் கட்சி சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் நீண்ட நாட்களாக கூறி வருகிறார். இதுவும், உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்.,18ம் தேதி டில்லி வந்த சசி தரூர், காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். அந்த அரை மணி நேரத்தில் தான் சில முக்கிய பிரச்னைகளை தெரிவித்ததாக தரூர் தெரிவித்தார்.டில்லி திரும்பிய அவர், செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்னை பற்றி கூற மறுத்து விட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்,'' என்று கூறிச்சென்றார்.சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கறேன். கட்சிக்கு பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கும் வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன.கட்சி மாறுவது குறித்த வதந்திகளை மறுக்கிறேன். என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.இவ்வாறு சசி தரூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

எவர்கிங்
பிப் 24, 2025 08:52

khan Crossல் வர வர நல்ல figure கள் குறைகிறதாம்


sankaranarayanan
பிப் 24, 2025 07:46

வெளியே வந்து ராஜா பி.ஜெ.பியில் ஐக்கியமாகிவிடு நல்ல பதவி கிடைக்கும் நன்றாக மக்களுக்கு செயல்படுத்தலாம் இந்த கட்சியில் உன் போன்ற திறமைசாலிகளுக்கு இனி அங்கே இடமே இல்லை வெளிய வா வா வா


சிவா. தொதநாடு.
பிப் 23, 2025 23:40

காங்கிரஸ் அட போயா காமெடி செய்ததற்கு முன்னாடி எங்க தமிழ்நாடு முதலமைச்சர் பின்பற்றுங்க அப்பதான் நல்லா காமெடி வரும்


Jay
பிப் 23, 2025 22:58

தனிப்பட்ட குடும்பம் நடத்தும் கட்சிகளில் எதார்த்தமாக மாற்றுக் கட்சியினரையோ ஆளுங்கட்சிணையோ புகழ்ந்தால் உடனடியாக நீக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி தலைமை குடும்பத்தை விட விவரமாக அறிவாக பேசினாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்த இரண்டும் சசிதருக்கு பொருந்தும். சசிதரூர் வெளியுறவு துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல அனுபவம் பெற்றவ. ஐநா அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு தேர்தலில் நின்றவர். இவ்வளவு அனுபவம், விவரம் உள்ளவர்களை எப்படி கட்சியில் நீடிக்க விட முடியும்


ரகுநாதன்
பிப் 23, 2025 22:49

choose your alternative immediately. no point in waiting.


MARUTHU PANDIAR
பிப் 23, 2025 22:15

புஷ்கரின் அந்த மர்ம மரண வழக்கு ஒரு வேளை தூசு தட்டப் படுகிறதோ என்னவோ , யார் கண்டது ?


Balasubramanian
பிப் 23, 2025 21:42

காங்கிரஸில் உங்களை கண்டு கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பெயரின் முடிவில் காந்தி என்று இருக்க வேண்டும்! ஆர் கே.லெட்சுமண் காலத்தில் இருந்தே இது தான் விதி! சமிபத்தில் தான் வதேரா வை சேர்த்து கொண்டார்கள்


Iniyan
பிப் 23, 2025 21:13

இவர் தன் பெண்டாட்டியை பாகிஸ்தான் காதலி கூட சேர்ந்து கொலை செய்த கொலைகாரர்.


Bye Pass
பிப் 23, 2025 21:01

ஒரு தடவை கங்கனாவை சந்தித்தால் BJP யில் சங்கமமாக வாய்ப்பிருக்கிறது


Ravi Ram
பிப் 24, 2025 00:47

கனிமொழியாய் சந்தித்தால் ?


Ramona
பிப் 23, 2025 20:55

Sir, leave khangrass and become a true patriotic person and help Modiji in building Great Bharath.shed your sickular id and become a true Indian. You will have a bright purposeful life.


முக்கிய வீடியோ