உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியை புகழ்ந்த விவகாரம்... கார்கேவின் விமர்சனத்திற்கு சசிதருர் மறைமுக பதிலடி

பிரதமர் மோடியை புகழ்ந்த விவகாரம்... கார்கேவின் விமர்சனத்திற்கு சசிதருர் மறைமுக பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியதை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அக்கட்சியின் எம்.பி., சசி தரூர் மறைமுகமாக பதில் அளித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்., மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர் சமீபகாலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இது, காங்கிரசார் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சசி தரூர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.சமீபத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி வெளிநாடுகளில் எடுத்துரைத்து விட்டு நாடு திரும்பிய சசி தரூர், பிரதமர் மோடியை பாராட்டினார். அவர் பேசியதாவது;பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவை உலக அரங்கில் நம் நாட்டின் முக்கிய சொத்தாக திகழ்கிறது; அதற்கு நாம் அனைவரும் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிட தொழில்நுட்பம், வர்த்தகம், பாரம்பரியம் ஆகிய மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும், இவ்வாறு கூறினார். இது, காங்., தலைமையை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில், நமக்கு நாடு தான் முதலில் முக்கியம், ஆனால், சில பேருக்கு பிரதமர் மோடி தான் முக்கியம் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; சசி தரூரின் பேச்சு மிகவும் அற்புதமானது. அதனால் தான் அவர் இன்னமும் காங்கிரஸ் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளார். நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்று கூறினோம். நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால், சிலருக்கு பிரதமர் மோடி முக்கியமாக தெரிகிறார். நாம் என்ன செய்ய முடியும்?, எனக் கூறினார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சுக்கு சசிதரூர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், 'பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்கக் கூடாது. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தம் கிடையாது,' என்று பகிர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V.Mohan
ஜூன் 26, 2025 15:01

சசி தரூரை நக்கலடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கார்கே அவர்களே பள்ளிப் படிப்பையே முடிக்காத ராகுல் காந்திக்கு காங்கிரஸில் இந்தளவு செல்வாக்கு வந்தது எப்படி??


கண்ணன்
ஜூன் 26, 2025 11:34

எந்தப் பள்ளிக்கும் செல்லாமல் உள்ள ஒரு பொம்மைத் தலைவர் வாய்க்கு வந்தபடிப் பேசுவதற்கெல்லாம் தரூர் போன்றோர் தமது பொன்னான நேரத்தைச் செலவிடத் தேவையில்லை


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 10:52

நல்லவற்றை பாராட்டினால், நாட்டுப்பற்றுடன் இருந்தால் அது காங்கிரஸ் கட்சி கொள்கைக்கும் கட்சி கட்டுப்பாட்டுக்கும் எதிரானது ..எனவே ...கூடிய விரைவில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சசிதரூக்கு காங்கிரசிலிருந்து கல்தா கொடுக்கப்படும் ...கேரளா பிஜேபி எம்பிக்கள் எண்ணிக்கை கூடும் ..


Shankar
ஜூன் 26, 2025 00:30

புகழும், பாராட்டுகளும் கொண்ட சசிதரூர் காங்கிரசில் அமர்ந்தே இருப்பதை விடுத்தது தேசத்துக்கு இறங்கிவந்து சமீபத்தில் நிகழ்த்திக்கொண்டதைப்போல் சேவைகளை இன்னமம் செய்ய தன்னை அர்பணிக்கலாம். ஜெய் ஹிந்த்.


Iyer
ஜூன் 25, 2025 23:18

ரெஸ்ட் ரூம் செல்லக்கூட பப்புவிடம் விரலை காண்பித்து PERMISSION வாங்கி சென்றால்தான் CONGRESS கட்சியில் தொடரமுடியும்.


krishnan
ஜூன் 25, 2025 22:23

கார்கே ஒரு ஜால்ரா ..typical அடிமை .


Suppan
ஜூன் 25, 2025 22:07

இருதலைக்கொள்ளி எறும்பாக காங்கிரஸ். சஷி தரூரை நீக்கினால் ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் எண்ணிக்கை குறையும். அவரை சேர்த்துக்கொள்ள பாஜ க தயார்


V Venkatachalam
ஜூன் 25, 2025 20:33

கான் கிராஸ் அஜெண்டாவே மோடியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது தான். சசி கண்ணை தொறந்துட்டார்.அதோடு நிக்கலை. என்ன நடக்குதுன்னு பாத்துட்டார். அதோடு விட்டாரா? பார்த்ததை அப்புடியே சொல்லிப்புட்டார்.. ஏற்கனவே கான்கிராஸ் தலைகளுக்கு வயிறு மட்டும் எரிந்தது. இப்போ உடம்பு பூரா எரியுது.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 20:04

கருப்பா இருந்தா கருப்பு என்றுதான் கூறவேண்டும். சிகப்பாக இருந்தா சிகப்பு என்றுதான் கூறவேண்டும். நேர்மையானவரை நேர்மையானவர் என்றுதான் கூறவேண்டும். உங்களுக்கு பயந்துகொண்டு எல்லாவற்றையும் எதிர்மறையாக கூறமுடியுமா? நீங்கள் அடிமை. சசி அப்படி அல்ல இப்போதைக்கு.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 19:41

காங்கிரஸ், திமுக கட்சியில் சேர்வோருக்கு முதலில் சிறகுகள் வெட்டி எறியப்படும்.