வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேசியம் பேசும் எவனையும் ஒழித்துக்கட்ட காங்கிரஸ் தயங்காது. யாராக இருந்தாலும் அந்த விதி பொருந்தும்.
கொச்சி: 'நிலம்பூர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய கட்சி மேலிடம் அழைக்கவில்லை' என, காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்த நிலையில், கேரள காங்., அதை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கேரளாவின் நிலம்பூர் சட்டசபை தொகுதிக்கு, நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடது ஜனநாயக கூட்டணி சார்பில், ஸ்வராஜ், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் ஆர்யாதன் சவுகத் களமிறங்கினர். ஆர்யாதன் சவுகத்தை ஆதரித்து, நிலம்பூர் தொகுதி முழுதும் காங்., தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கொடிகுன்னில் சுரேஷ் போன்றோர் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனால், காங்கிரசைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி.,யும், மூத்த தலைவருமான சசி தரூர் பிரசாரத்துக்கு வரவில்லை. சசி தரூர் கூறுகையில், 'பிரசாரத்துக்கு வரும்படி யாரும் அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாக செல்ல விருப்பமில்லை' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள காங்., தலைவர் சன்னி ஜோசப் நேற்று கூறுகையில், ''நிலம்பூர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கான கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், சசி தரூர் பெயர் உள்ளது. ''தேர்தல் கமிஷனிலும் அந்த பட்டியலை தான் சமர்ப்பித்தோம். பெரும்பாலும் சசி தரூர் வெளிநாடுகளில் இருக்கிறார். இல்லை எனில், டில்லியில் இருக்கிறார். பிரசாரத்துக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது,'' என்றார்.சமீப காலமாக, மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் காங்., - எம்.பி., சசி தரூர் பாராட்டி வருகிறார். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது. சசி தரூரின் பெயரை காங்., பரிந்துரைக்காத நிலையில், அவரை ஒரு குழுவின் தலைவராக மத்திய அரசு நியமித்தது. இது காங்., தலைவர்களை அதிருப்தி அடையச் செய்தது. போதாதென்று, வெளிநாடுகளுக்கு சென்ற சசி தரூர், பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளினார். கடுப்பான காங்., நிர்வாகிகள், பா.ஜ.,வின் சூப்பர் செய்தித் தொடர்பாளர் போல் சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்தனர். கேரளாவில், அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநில காங்., நிர்வாகிகள் - சசி தரூர் இடையேயான மோதல் முற்றி உள்ளது.
தேசியம் பேசும் எவனையும் ஒழித்துக்கட்ட காங்கிரஸ் தயங்காது. யாராக இருந்தாலும் அந்த விதி பொருந்தும்.