உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்

வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் அக்கட்சி எம்பி சசிதரூர், வாரிசு அரசியலை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கோபம் அடைந்த நிலையில், சசி தரூர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பாஜ அறிவுறுத்தி உள்ளது.

மோதல்

திருவனந்தபுரம் தொகுதியில் தொடர்ந்து 4 முறை எம்பியாக இருந்து வருபவர் சசி தரூர். அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கேயை எதிர்த்து போட்டியிட்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை பாராட்டி பேசியிருந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அரசின் நடவடிக்கையை ஆதரித்த அவரின் கருத்துகள் கட்சியில் மோதலை அதிகரித்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாகவே சசிதரூரை விமர்சிக்க துவங்கினர். காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள் குழுவில் சசிதரூரை மத்திய அரசு நியமித்து இருந்தது.

விமர்சனம்

இந்நிலையில் அடுத்தபடியாக வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் நாளிதழில் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் வாரிசு அரசியலை ஈடுபட்டு வருகிறது. அக்கட்சி மூத்த தலைவர் சோனியா, மகன் ராகுலை பிரதமராக்க முயற்சித்து வருகின்றார் என பாஜ தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறன் இல்லாதவர்கள்

அந்தக் கட்டுரையில் சசி தரூர் எழுதியதாவது: இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல் அதிகாரம் என்பது திறன்,உறுதிப்பாடு அல்லது அடிமட்டத்தில் இருந்து தொடர்புகளுக்கு மாறாக பரம்பரை முறையில் தீர்மானிக்கப்படும் போது நிர்வாகம் பாதிக்கப்படும். குறைந்தளவிலான திறமையாளர் குழுவில் இருந்து தேர்வு செய்வது ஒரு போதும் சாதகமாக இருக்காது. ஆனால், வேட்பாளர்களின் தகுதி அவர்களின் குடும்பப் பெயராக மாறும் போது, அது மிகவும் சிக்கலானது. உண்மையில், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து, வாரிசு அரசியலில் இருந்து வந்தவர்கள், தனிமைபடுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களின் தொகுதி மக்களின் தேவைகளுக்கு திறம்பட பதிலளிக்க போதுமான திறன் இல்லாதவர்களாக உள்ளனர். மோசமான செயல்பாடுகளுக்கு அவர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.வாரிசு அரசியலில் இருந்து, தகுதியுடையவர்களின் ஆட்சியாக மாற்றுவதற்கன நேரம் இது. இதற்கு சட்டப்பூர்வமான குறிப்பிட்ட காலவரம்பு முதல் அர்த்தமுள்ள உட்கட்சி தேர்தலுடன், தகுதி அடிப்படையில் தலைவர்களை தேர்வு செய்ய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வரையிலான அடிப்ப்படை மாற்றங்கள் தேவைப்படும். இந்திய அரசியல் ஒரு குடும்ப நிறுவனமாக இருக்கும் வரை, ஜனநாயகத்தின் உண்மையான வாக்குறுதியான, ' மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசு என்பதை முழுமையாக உணர முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜ செய்துள்ளதா

காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறியதாவது: தலைமைப்பதவி என்பது எப்போதும் தகுதி அடிப்படையில் வரும். நாட்டின் மிகவும் திறமைவாய்ந்த பிரதமராக நேரு இருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா, வாழ்க்கையை அர்ப்பணித்து தனது திறமையை நிரூபித்தார். ராஜிவும், தனது வாழ்க்கையை தியாகம் செய்து நாட்டிற்கு சேவையாற்றினார். நேரு குடும்பத்தினரை வாரிசு அரசியல்வாதி என யாராவது ஒருவர் விமர்சித்தால், இந்தியாவில் மற்ற குடும்பத்தினர் செய்த தியாகம் அர்ப்பணிப்பு என்ன? பாஜ செய்துள்ளதா? இவ்வாறு அவர் கூறினார்.

பழிவாங்கும்

இது தொடர்பாக பாஜவின் ஷெசாத் பூனவல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சசி தரூர் ஆபத்தான வீரராக மாறியுள்ளார். அவர் நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2017 ல் ராகுலை நான் ' நெப்போ நாம்தார்' என விமர்சித்த போது எனக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல் குடும்பத்தினர் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Kulandai kannan
நவ 04, 2025 21:20

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு கேடு


பேசும் தமிழன்
நவ 04, 2025 21:02

என்னாது நேரு மற்றும் ராஜீவ் திறமையானவர்களாக இருந்தார்களா.... நேரு கிழித்த கிழிப்பு தான் தெரியுமே.... வல்லபாய் படேல் அவர்கள் 550 க்கும் மேற்ப்பட்ட சமஸ்தானங்களை எவ்வித இடையூறும் இல்லாமல் ஒன்றிணைத்த போது ....நேரு அவர்களின் பொறுப்பில் விடப்பட்ட காஷ்மீர் ...ஹைதராபாத்....போன்றவற்றின் நிலை என்னவானது என்று தெரியும் தானே ..... படேல் அவர்கள் சுதாரித்து கொண்டு ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து இந்தியாவுடன் இணைந்து கொண்டார் .....நேருவின் பொறுப்பில் இருந்த காஷ்மீர் இன்றைக்கும் நமக்கு தலைவலியாக இருக்கிறது.....அடுத்து ராஜீவ் ....தேவையில்லாமல் அடுத்த நாட்டின் விஷயத்தில் தலையிட்டு .....இலங்கை தமிழ் பெண்கள் கற்பழிப்பு ....மற்றும் தமிழர்கள் படுகொலைக்கும் காரணமாக இருந்தார் ....அதனால் தான் உயிரையும் விட்டார் ......


தாமரை மலர்கிறது
நவ 04, 2025 20:35

தரூர் விரைவில் பிஜேபியில் இணைந்து பணியாற்றுவார்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 04, 2025 21:57

இவருடைய மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை வைத்து மிரட்டுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று கூறப்படுகிறது.


M Ramachandran
நவ 04, 2025 20:31

குடும்ப அரசில் வாரிசுதாரர்கள் பெரும்பாலும் திறன் அற்றவர்கள் இதற்கு உதாரணம் ராகுலும் உதயநிதியும் நேரிடையாகவே பார்க்கிறோம். ஸ்டாலின் திறமையும் போற்றுதற்குரியதல்ல. RSS மூலம் வளர்க்க பட்டவர்கள் திறமை சாலிகளாகவுயம் நாட்டு பற்று உள்ளவர்காளாகவேர் உள்ளனர். முன்பு கம்யூனிஸ்டு கோட்பாடுடையவர்கள் திறமையானவர்கள்ளாகவே இருந்தனர். அனால் இக்காலத்து கம்யூனிஸ்டுகள் நாட்டுப்பற்றற்ற கையேந்தும் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டனர். அதனால் சொந்த கொள்கைர் யேதுமின்றி அவர்களால் சார்ந்த கட்சிகளின் ஊது குழலாளாக மாறி மக்களிடமிருந்து விலகி சென்று விட்டனர் பரிதாபத்திற்குரிய கம்யூனிஸ்டுகள்.


தமிழ்வேள்
நவ 04, 2025 20:06

சசி தரூர் தனது கட்டுரையில் எந்த இடத்திலும் காங்கிரஸ் கட்சி அல்லது நேரு குடும்பம் என்ற சொற்களை பயன்படுத்தவே இல்லை..பிறகு ஏன் காங்கிரஸ் கும்பல் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிக்க வேண்டும்? இது ஒரு பொதுவான இன்றைய தேச அரசியல் நிலையைக்குறித்த கருத்து... நியாயமாக துள்ளி குதித்து கூவி திட்டி சதிராடி இருக்க வேண்டிய திமுக, தெலங்கானா மூக்கன் கும்பல், மாட்டு சாணி லாலு கோஷ்டி ஆகியன சர்வாங்கங்களையும் கையது கொண்டு மெய்யது பொத்தி என்று கிடக்கும் போது, காங்கிரஸுக்கு தையா தக்கா என குதிக்கும் அளவில் என்ன கொள்ளை போனது?


KRISHNAN R
நவ 04, 2025 18:25

சனநாயகம்.... என்பது குடும்ப நிர்வாகம் அல்ல


Balasubramanian
நவ 04, 2025 18:22

உ.பி.முதல்வர் யோகிஜி கூறியது போல் - பப்பு ராகுல் எதையும் பேசுவார் - தப்பு தேஜஸ்வி யாதவ் நல்லது எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் - அப்பு அகிலேஷ் யாதவ் நல்லது எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்! - இந்த மூன்று வாரிசு தலைவர்களும் - ஒரு விதத்தில் காந்திஜியின் மூன்று பொம்மைகளை நினைவுறுத்தும் வகையில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்றது - நினைவுக்கு வருகிறது!


Indian
நவ 04, 2025 17:58

எதிரியை விட துரோகி மிக மோசமானவன் ..


ரகுநாதன்
நவ 04, 2025 18:55

யார் சொன்னாலும் உண்மை, உண்மை தான்.


vivek
நவ 04, 2025 22:48

துரோகியை விட திமுக மோசமானது


Rahim
நவ 04, 2025 17:34

ஒரே தொகுதியில் 4 முறை சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு மட்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கும் இந்த பச்சோந்தி மனைவியை கொன்ற கொலைகார துரோகி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்.


Field Marshal
நவ 04, 2025 19:30

மனைவி இறந்தபோது இவர் வெளிநாட்டில் இருந்தார் ..ஐம்பது வருட திமுக ஆட்சியில் ஒரு இஸ்லாமியரோ மகளிரோ தாழ்த்தப்பட்டவரோ முதல்வராக அல்லது கட்சி தலைவராக முடியவில்லையே


K V Ramadoss
நவ 04, 2025 20:23

நீ பார்த்தாயா?


ஆரூர் ரங்
நவ 04, 2025 17:29

பரம்பரையாக ஆட்சி செய்ய நாடென்ன உங்க குடும்ப சொத்தா ? கேட்டவர் கருணாநிதி ஆண்டு .1977.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை