உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் அறிவிக்கட்டும்; அப்போ தெரியும் எங்க அம்மா யாருன்னு: சொல்கிறார் ஹசீனா மகன்!

தேர்தல் அறிவிக்கட்டும்; அப்போ தெரியும் எங்க அம்மா யாருன்னு: சொல்கிறார் ஹசீனா மகன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'வங்க தேசத்தில் புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா நாடு திரும்புவார்' என ஷேக் ஹசீனா மகன் சஜீப் வசத் ஜோய் தெரிவித்தார். வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், மாற்றுத்துணி கூட இல்லாமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவருக்கு இந்திய அரசு சார்பில் தகுந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்' என்று அவரது மகன் சஜீப் வசத் ஜோய் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

ஹசீனா மகன் சொல்வது இதுதான்!

தற்போது, ஹசீனா மகன் சஜீப் வசத் ஜோய் கூறியதாவது: புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா நாடு திரும்புவார். அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தற்போதைக்கு அம்மா இந்தியாவில் இருக்கிறார். எனக்கு அரசியல் ஆசை இல்லை. கட்சிக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு நான் இப்போது முன்னணியில் இருக்கிறேன்.

மோடிக்கு நன்றி

பாகிஸ்தான் உளவுத்துறை வங்க தேசத்தில் அமைதியின்மையை தூண்டுகிறது. கடந்த இரண்டு நாட்களில் எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாங்கள் அவர்களை விடமாட்டோம். நிச்சயம் பதிலடி கொடுப்போம். என் தாய்க்கு பாதுகாப்பு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பச்சையப்பன் கோபால் புரம்
ஆக 09, 2024 13:15

ஆமாமா!


Kumar Kumzi
ஆக 09, 2024 13:51

கட்டுமரம் கொத்தடிமை


M.COM.N.K.K.
ஆக 09, 2024 12:50

உலகில் தற்போது சாதி பிரச்னைகளைவிட மத பிரச்சனைதான் மோசமாகிறது.மனித இனம் திருந்தவேண்டும் என்பதற்காகத்தான் மதங்கள் தோன்றின.மதங்கள் தோன்றியது அழிவுக்குத்தானா என்று தற்போது என்ன தோன்றுகிறது.


ديفيد رافائيل
ஆக 09, 2024 12:39

அதிகாரம் இருக்குன்னு தன்னோட இஷ்டத்துக்கு சட்டம் நிறைவேற்றினால் இது தான் கதி. இந்திய மக்கள் ஊழல் பேர்வழிகள். இந்திய மக்கள் மாதிரி எல்லாருமே இருப்பார்களா?


Kumar Kumzi
ஆக 09, 2024 13:53

ஓஹ் நீ பங்களாதேஷ் ரோஹிங்கியா அப்ப சரி


Prasanna Krishnan R
ஆக 09, 2024 16:16

தைரியம் இருந்தால் தமிழில் பதிவிடுங்கள். அதுவும் உங்கள் உண்மையான பெயரில்.


Ramesh Sargam
ஆக 09, 2024 12:16

பதவி ஆசை எந்த நாட்டிலும் யாரையும் விடுவதில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 11:51

தேர்தல் நடந்து பெரும்பான்மை பெற்றுத்தானே மீண்டும் ஆட்சி அமைத்தார் ????


vadivelu
ஆக 09, 2024 12:25

உண்மை, அந்நாட்டு பாதுகாப்பு ராணுவம் அவருக்கு எதிராக இருந்து விட்டதே. எதிர் கட்சியே ராணுவம் என்றால் என்ன செய்ய.


SEVVANNAN
ஆக 09, 2024 13:09

தேர்தல் நியாயமான முறையில் நடக்க வில்லை அதுவும் அநேகமாக கடந்த 3 முறையும் அவ்வாறுதான் கலீதா வென்றார் எதிர் கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் நோபல் பரிசு வென்ற வரையும் விட்டு வைக்கவில்லை இந்தியாவுடன் இணக்கமாக இருந்ததால் நாமும் அதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம் மற்ற மதத்தை எதிரிகள் மாதிரி பார்க்கும் போக்கு ஆபத்தானது


ஆரூர் ரங்
ஆக 09, 2024 11:37

இஸ்லாமிய நாடுகளுக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ராமாயணத்தில் போற்றும் இந்தோனேஷியாவில் கூட ஒரு மாநிலத்தில் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கற்காலத்திலிருந்து வெளிவரமாட்டார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை