உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி

அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி

அயோத்தி: உ.பி.,யில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.,வுக்கு பலமான ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற உள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் நடைபெற்றது. மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமர் கோயில் கனவு நிறைவேறியதால் பா.ஜ.,விற்கு ஆதரவு பெருகியது. இது இந்த லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில், உ.பி.,யில் பாதிக்கும் மேலான தொகுதியில் பா.ஜ., தோல்வியடைந்தது. குறிப்பாக, அயோத்தியின் ராமர் கோயில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ., வெற்றிப்பெறும் என கணித்த நிலையில், அங்கு சமாஜ்வாதி கட்சி வெற்றி அடைய உள்ளது. பா.ஜ., வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையுடன் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றியை நெருங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vasudevan
ஜூன் 06, 2024 19:07

மத நல்லிணக்கம் வெறும் வாயில் பேசி, minority மக்கள் மட்டும் எல்லாம் பெறணும் என சலுகை கொடுத்து ஓட்டு வங்கி உருவாக்கி வெற்றியை பெறுவது கேவலம். உண்மையில் பொருளாதார அடிப்படையில் வசதி குறைந்த அனைவரும் சலுகைகள் பெறணும் ஓட்டு வங்கிக்காக மட்டும் புது புது minority திட்டங்கள் வகுத்து மொத்தமாக ஓட்டு அள்ளுவது மகா கேவலம். கேரளாவில் தமிழ்நாட்டில் அது தானே நடக்குது. பள்ளிவாசல் சர்ச் இதில் கூட ஓட்டு வேட்டை. பாதிரியார்கள், இமாம், ஜமாத் எல்லாம் ஓட்டு போட சொல்லி கூட்டம் போட்டு minority ஓட்டு கொத்து கொத்தாக அள்ளுகிறார்கள். படித்த, ஜாதி பிரிவு பார்க்காத அனைத்து ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து விரட்டாவிட்டால் இந்த கள்வர்கள் மீண்டும் மீண்டும் ஜெயித்து கொண்டே இருப்பார்கள். பிஜேபி எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடியது போல், கடும் DMK எதிர்ப்பாளர்கள் Ego பார்க்காமல் ஒன்று சேர்ந்து 2026 தேர்தலில் விரட்டணும் DMK வை. ஒருத்தன் வாய் திறக்கலே EVM பற்றி இந்த முறை.


Padmashri Lakshminarayanan
ஜூன் 05, 2024 21:15

Sri ram blessed true bakth. That is samajwathi party. neglect duplicate people actors bjp


T.Gajendran
ஜூன் 05, 2024 14:50

எப்படி சார் ?? ஒற்றுமை, வரும்,


raja
ஜூன் 05, 2024 06:55

இனியாவது இந்தியாவில் வாழும் இந்துக்கள் சற்று உப்பு போட்டு சாப்பிட வேண்டும் பாபெர் மசூதி என்ற ஒற்றை புள்ளியில் அந்த சமூகத்தினர் ஒன்றிணைந்து பிஜேபி. யை தோற்கடித்து இருக்கிறார்கள் ஆனால் இந்துக்கள் ஜாதிவாரியாக பிரிந்து செல்கிறார்கள்.. வரலாற்றில் இதே பிழையை செய்ததால் தான் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக அடிமை பட்டு கிடந்தோம் வந்தேறி மததினரிடம்....


nsathasivan
ஜூன் 04, 2024 22:47

நல்லதுக்கு காலம் இல்லை.ரவுடிசத்தை ஒழித்து நேர்மையாக ஆட்சி செய்யும் யோகி ஆதிநாத்தை விட சிறந்த தலைவராக அகிலேஷ் ஆகி விட்டாரா?


rsudarsan lic
ஜூன் 04, 2024 20:33

வடக்கே சமாஜ்வாடி தெற்கே திமுக இந்தியாவை முகலாயர்களுக்கு விற்ற பரம்பரையினர்


venugopal s
ஜூன் 04, 2024 20:09

மக்களுக்கு தேவை ராமர் கோவில் அல்ல, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு என்று மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.


GVR
ஜூன் 05, 2024 03:10

You think that Akilesh will do all that? Dream on.


thiruvazhimaruban kuttalampillai
ஜூன் 04, 2024 18:01

ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டிய மோடிஜிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு ஒரு பாவ செயல்.


vignesh
ஜூன் 04, 2024 17:37

கோவில் கட்டுனா மட்டும் பத்தாது.... நாட்டுல விலைவாசி, வேலைவாய்ப்பின்மைய குறைக்கணும்


Neutrallite
ஜூன் 05, 2024 09:55

கோவில் கட்டாதவங்க விலைவாசியை குறைக்க தான் அயராது உழைக்குறாங்களா? போங்க பாஸ் இதெல்லாம் அரத பழசு...சொன்ன ஜோதிகாவே மும்பைக்கு ஓடிட்டாங்க. ஒரு கோயில் ஒரு சமூகத்துல சுதந்திரமா இருந்தப்போ எத்தனை பேருக்கு கல்வி உதவியும், கலை வளர்ச்சியும் செஞ்சுதுன்னு உங்களுக்கு தெரியுமா?


GMM
ஜூன் 04, 2024 17:26

பிஜேபிக்கு பலமுனை எதிர்ப்பு. எதிர் கட்சி பெரும் கூட்டம், அந்நிய எதிர்ப்பு ஒன்றும் செய்ய முடியாது. மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியும். நீதிமன்ற வழக்கறிஞர்கள், NGO பலமான எதிர்கட்சியாக செயல்பட்டனர். நீதிமன்ற அதிகாரம் முறை படுத்த தெரியவில்லை. இலவசம் அறிவிப்பு வாரி வழங்கப்பட்டன. நீதிபதிகள் எல்லா கட்சியும் இப்படி அறிவித்தால், பொருளாதாரம் என்ன ஆகும் என்று கேட்டு, தடுக்க விரும்பவில்லை. அரசு செய்ய முடியும். அரசியலாக மாறும். நீதிமன்றம் குழப்பி விட்டது. வாக்கு வங்கி உள்ள சாதி, சமூகம் இட ஒதுக்கீடு விரும்புகிறது. ஏழைகள் இலவசம் விரும்புகிறார்கள். ஊழல் ஒழிப்பு பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை.


hari
ஜூன் 04, 2024 22:04

நல்லா சூப்பரா முட்டு குடுக்குறியே GMM.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை