உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 ஆண்டில் ரூ.69 கோடி பரிவர்த்தனை  ஐஸ்வர்யா வங்கி கணக்கில் அதிர்ச்சி

3 ஆண்டில் ரூ.69 கோடி பரிவர்த்தனை  ஐஸ்வர்யா வங்கி கணக்கில் அதிர்ச்சி

பெங்களூரு: மோசடி பெண் ஐஸ்வர்யா கவுடா வங்கி கணக்கை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்று ஆண்டுகளில் அவர் 69 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்தது தெரிந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, பலரிடம் மோசடியில் ஈடுபட்ட ஐஸ்வர்யா கவுடா பற்றி ஒவ்வொரு நாளும் பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது.ஐஸ்வர்யா பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிந்ததால், அவரது வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த 2021 முதல் 2023 வரை ஐஸ்வர்யா வங்கி கணக்கிற்கு 50 கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. 2023 முதல் 2024 வரை 19 கோடி ரூபாய் வந்தது. இதில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வேறு சில வங்கி கணக்குகளுக்கு ஐஸ்வர்யா பரிமாற்றம் செய்துள்ளார். யாருடைய வங்கி கணக்கிற்கு பணம் சென்றது என்று போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.பொதுவாக, லட்சக்கணக்கில் ஒருவருடைய வங்கி கணக்கிற்கு பணம் வருகிறது என்றால், அது பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கி அதிகாரிகள் விசாரிப்பதும், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுப்பதும் வழக்கம்.ஆனால், ஐஸ்வர்யா வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் வந்த போதும், வங்கி அதிகாரிகள் அது பற்றி ஐஸ்வர்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது வருமான வரித்துறைக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் ஐஸ்வர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடக்கவும் வாய்ப்புள்ளது.இதற்கிடையில் கர்நாடகாவை சேர்ந்த, கோல்கட்டாவில் வசிக்கும் டாக்டர் ஒருவர், நிலம் வாங்கி தருவதாக ஐஸ்வர்யா தன்னிடம் 1.10 கோடி ரூபாய் ஏமாற்றியதாக, ஏ.சி.பி., பரத் ரெட்டியிடம் நேற்று முன்தினம் புகார் செய்தார். இது தொடர்பாகவும் தற்போது விசாரணை நடக்கிறது. வரும் நாட்களில் ஐஸ்வர்யா மீது இன்னும் பலர் மோசடி புகார்கள் வரும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Krishnamurthy Venkatesan
ஜன 19, 2025 19:35

பண பரிவர்தனை கோடிகளில் இருந்தும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தாத வங்கி அதிகாரிகள், வங்கி மேலதிகாரிகள் மீது நடவடிக்கையும் அவர்களின் வீட்டிலும் வருமான வரி/police சோதனை நடத்தப்படவேண்டும்.


NAGARAJAN
ஜன 18, 2025 12:24

தினமலர் செய்திகள் எப்போதும் காங்கிரஸ்காரன் என்றால் உடனடியாக ஓவென்று ஊளையிடுகிறீர்கள் செய்திகள் எப்போதும் நடுநிலையாக இருக்க வேண்டும்


ram
ஜன 18, 2025 14:25

அதுக்கு என்ன பண்ணுவது fraud பண்ணுவது அனைவரும் காங்கிரஸ் காரான இருப்பதால். எப்படி நீங்கள் இங்கு நடக்கும் அநியாயங்களை பத்தி எதுவும் கண்டுக்காமல், utterpradeshil ஒன்றுக்கும் உதவாத செய்திகளை வைத்து பிழைப்பு நடத்தும் போது, உண்மையில் காங்கிரஸ் ஆட்கள் fraud செய்வதை ஏன் எழுத கூடாது.


Venkateswaran Rajaram
ஜன 23, 2025 10:58

தினமலர் ஒன்று தான் ஓரளவு நடுநிலையோடு உள்ளது ...


Sethuraman G
ஜன 18, 2025 11:08

ஒரு சில வங்கிகாரன் தான் உண்மையான கூட்டு குற்றவாளி , துரோகி. அவனுக்கு எல்லாம் தெரியும், யார் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு வேவு , கிரெடிட் கார்டு காரனுக்கு வட்டி காரனுக்கு இன்சூரன்ஸ் காரனுக்கு மற்ற பிசினஸ் காரனுக்கு நம்ம பேங்க் டீடெயில்ஸ் வித்துட்டு ஒன்னும் தெரியாத மாறி ஒக்கருவான். ஆன்லைன் திருட்டும் இந்த மாதிரி டீடெயில்ஸ பயன் படுத்திக்கும்.


Alagusundram Kulasekaran
ஜன 18, 2025 08:34

ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் இது தவறு ஏமாற்றுபவர்கள் அல்ல ஏமாறுபவர்கள்தான்


Ram Moorthy
ஜன 18, 2025 08:12

பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு சோதனைகள் எல்லாம் சகஜம் சொந்த அறிவு அதாவது சிந்திக்கும் திறன் மிக குறைவு


R.RAMACHANDRAN
ஜன 17, 2025 07:31

வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர்கள் எத்தகைய குற்றத்திற்கும் உதவி செய்வர்.


முக்கிய வீடியோ