நடைப்பயிற்சி சென்றவர் மீது துப்பாக்கி சூடு
புதுடில்லி:பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்களை போலீசார் தேடுகின்றனர். புதுடில்லி பேகம்பூரை சேர்ந்தவர் லக்பத் சிங் கட்டாரியா, 55. வீட்டருகே உள்ள பூங்காவில் நேற்று காலை நடைப்பயிற்சி செய்தார். அப்போது, கட்டாரியாவை வழிமறித்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். லேசான காயம் அடைந்த கட்டாரியா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து, மாளவியா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.