உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பது குறித்து பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ip8heamm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கு முன்பாக, வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் தான் பயத்தில் வர மறுக்கிறார். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம்,' என அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள் ,'செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க ஏன் இவ்வளவு அவசரம். 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும் போது, அவர் அமைச்சராக தொடர்ந்தால் என்ன நடக்கும்?செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை அவரது தரப்படும் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி அமைச்சராக தொடர விரும்பினால், முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம்,' என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Ray
பிப் 15, 2025 12:19

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எங்கிருந்தாலும் சாதிப்பவராச்சே


Krishna
பிப் 13, 2025 16:09

பல லட்சங்களை ஒரு மணி நேரத்துக்கு வாங்கும் வழக்கறிஞர்களை வைத்துகொடுள்ள இந்த வழக்கை நடத்த வேண்டிருக்கிறதே.


Varadarajan Desikan
பிப் 13, 2025 12:12

இதே உச்சநீதிமன்றம் தான் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநரை வற்புறுத்தியது. பின்னர் ஏன் இப்போது கேள்வி கேட்கிறது. பைத்தியக்கார நாடு. பைத்தியக்கார மக்கள்


S.V.Srinivasan
பிப் 13, 2025 08:58

என்னங்க கேள்வி இது? கெஜ்ரிவாலுக்கு ஒரு சட்டம் பாலாஜிக்கு ஒரு சட்டமா. கெஜ்ரிவாலை எப்படி பதவி நீக்கம் செய்தீர்களோ அதைபோல் இந்த ஆளையும் பதவி நீக்கம் செய்து வழக்கை தொடர்ந்து நடத்தி சீக்கிரம் உள்ள தள்ளுங்க.


seshadri
பிப் 13, 2025 01:09

எஜமான் நீங்கள் இப்படியே கேள்வி கேட்டு கொண்டே இருங்கள். அதற்குள் அடுத்த எலெக்ஷன் வந்து விடும். அதற்கு பிறகு தீர்ப்பு வந்தால் என்ன வராவிட்டால் தான் என்ன. நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வைத்த / ஜாமீன் கொடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 12, 2025 22:32

ஏன் பதவியேற்பு செஞ்சு வைக்கலை ன்னு கவர்னரையும் எகிறுவோம் ..... அதே சமயம் மக்கள் நம்பிக்கையைப் பெற நீயி எப்படி முந்திரியானே என்று மேம்போக்காக கேட்டும் வைப்போம் ....


Venkataraman
பிப் 12, 2025 22:11

ஊழல் அரசியல்வாதிக்கு துணை போகிறது தமிழக அரசும் உச்சநீதி மன்றமும். இதுவரை எந்த ஊழல் அரசியல்வாதியும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஜெயலலிதா ஊழல் வழக்கில் இருபது ஆண்டுகள் வழக்கு நடைபெற்றும் தீர்ப்பு வராததால் அவர் முதல்வராக தொடர்ந்து இருந்து விட்டு இறந்து விட்டார். கருணாநிதியின் ஊழல் வழக்கில் அவர் விஞ்ஞானபூர்வமாக கொள்ளையடித்ததாக சொன்ன நீதிபதி மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆ.ராசா, கனிமொழி மீதான ஊழல் வழக்குகள் இப்போதும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலை தான் குற்றவாளிகளுக்கு மேலும் குற்றங்களை செய்ய ஊக்கம் கிடைக்கிறது


Siva Rama Krishnanan
பிப் 12, 2025 21:38

மிகுந்த வியப்பாக உள்ளது உச்ச நீதிமன்றம். கண்டனம் தெரிவிக்காமல் இப்படி சப்பை கேள்விகள் கேட்டு காலம் தாழ்ந்துவது பதவி உச்சத்திற்கே போக வைப்பது


sankaranarayanan
பிப் 12, 2025 21:31

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி இப்படியே கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வழக்குகளை ஒத்திவைத்துக் கொண்டே செல்லுங்கள் நீதி அரசர்களே. பிறகு இப்போது இருக்கும் நீதி அரசர்கள் ரிட்டையர் ஆகிவிடுவார்கள். பிறகு அடுத்த தேர்தல் வந்து விடும் அதிலே அவரே நின்று ஜெயித்து திரும்பவும் அமைச்சராகிவிடுவார் இது என்ன கேலி கூத்தாகவே உள்ளது.ப்போதுதான் நீதி அரசர்கள் முதுகு நிமிர்ந்து சரியான நீதியை உடனே வழங்குவார்கள்.இப்போது அவர் அமைச்சர் ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டன.அதே போன்றுதான் பொன்முடி அவர்களும்


venugopal s
பிப் 12, 2025 21:23

இவர் அமைச்சராக இருந்தால் என்ன தவறு?


krishna
பிப் 13, 2025 01:22

200 ROOVAA COOLIE KODUTHAAL VENUGOPALAI NAALU SAATHU SAATHALAMM.AVAR VEEDU PUGUNDHU ENNA VENA SEYYALAAM ILLAYA EERA VENGAAYAM VENUGOPAL. KEVALAM NEE ELLAM MANIDHA JENMAMAA.


S.V.Srinivasan
பிப் 13, 2025 09:00

இவர் அமைச்சராக இருப்பதுதான் தவறு.


guna
பிப் 13, 2025 11:01

உனக்கு மூளை இருக்கும் என்பதும் தவறுதான்


Radhakrishnan Harichandran
பிப் 13, 2025 11:16

திருட்டு கேசில் ஜாமின் பெற்ற ஆளை உன் வீட்டுக்கு காவலுக்கு வைப்பீர்களா, அப்படி வைத்தால் நீங்கள் ஒன்று அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் அவனை விட பெரிய கொள்ளைகாரனாக இருக்க வேண்டும், நீங்கள் எப்படி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை