உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

இதுக்கு டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டுமா? பாகிஸ்தானை வறுத்தெடுத்த ஓவைசி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா' என்று பாகிஸ்தானுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கண்ணியமான முறையில் சமாதானத்தை நிலைநாட்டியவர் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை மேற்கொள்வதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது.இந்நிலையில் இன்று (ஜூன் 22) ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு, டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா? என்று பாகிஸ்தானியர்களிடம் நாம் கேட்க வேண்டும். அமெரிக்காவின் இந்த தாக்குதல் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உதவியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபருடன் இரவு உணவு சாப்பிட்டாரா? அவை அனைத்தும் இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. காசாவில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது, அமெரிக்கா அதைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிந்தனை
ஜூன் 22, 2025 22:12

1940 வரை முகமது அலி ஜின்னா கூட இதை விட உத்தமபுத்திரன் ஆகத்தான் இருந்தார்


Rajendra kumar
ஜூன் 22, 2025 20:26

தீவிரவாதத்தை உருவாக்கிய பாலஸ்தீனம் & ஈரானையும் இஸ்ரேல் செய்வது மிக சரியானது தான். பாலஸ்தீன மக்களுக்கு தெரியாமலா பல நூறு கிமீ சுரங்கம் & ஹமாஸ் தீவிரவாதம் இருந்தது? தீவிரவாதத்தை உண்மையாக எதிர்ப்பது சில சதவீத முஸ்லீம்கள் மட்டுமே. முஸ்லீம் பெரியவர்கள் அதை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். எதிர்த்து எடுத்து சொல்வதற்கு அங்கு ஆட்கள் இல்லை. உலகின் எந்த மூலையில் முஸ்லீம் ஒருவருக்கு பிரச்சினை என்றால் அனைத்து முஸ்லீம் நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். அனைத்து நம்பிக்கை மனிதர்களையும் உளமாற மதிக்கும் பக்குவம் 95% சத இஸ்லாமியர்களுக்கு இல்லை என்பதே உண்மை ஆனால் இந்த காலகட்டத்தில் பல இஸ்லாமியர் மாறி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியான விஷயம்.


krishnamurthy
ஜூன் 22, 2025 18:35

பாவம் பிச்சை எடுக்கிறான் டிரம்ப் பொய் சொல்லி


S.kausalya
ஜூன் 22, 2025 17:00

இந்த உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் இந்த. மூர்க்கர்களை மட்டும் நம்ப கூடாது. தனி ஒருவராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒன்று கூடி விட்டால் நியாய தர்மம் பார்க்க மாட்டார்கள். மார்கம் மட்டுமே தெரியும்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 16:22

இரானிய முஸ்லிம்களை கொள்வதற்கு பாகிஸ்தான் எவ்வளவு காசு வாங்கினானோ ? முனீர் போயி வந்தப்பவே ஒரு டவுட்டு


Senthoora
ஜூன் 22, 2025 15:30

இதுக்கெல்லாம் அலட்டிக்கத்தேவை இல்லை. நோபல் பரிசுக்கு, ஒருவருடைய பிறப்பில் இருந்து அவரது நடவடிகை, அவரின் நன்னடத்தை கணிக்கப்படும் முதலில், ட்ராப் ஒரு Play Boy அவுளவுதான் நோபல் நிறுவனம் டிரம்ப் ரிஜெக்ட்.


kumarkv
ஜூன் 22, 2025 15:20

போரை நிறுத்தியது பாக்கிஸ்தான்தான். ட்ரம்ப்பு அல்ல. தனக்கு தானே ஒரு பரிசு கொடுத்துக்கோ.


தமிழ்வேள்
ஜூன் 22, 2025 13:33

இனப்படுகொலை ன்னு நீங்கள் தான் கூவுகிறீர்கள்.. 56 இஸ்லாமிய நாடுகளில் எவனும் சட்டை செய்யவில்லை...ஷியா -சன்னி வாய்க்கால் வரப்பு தகராறு உலகில் சந்தி சிரிக்கிறது...பாரத மூர்க்க மார்க்க ஆசாமிகள் மட்டுமே பொங்கிகிறீர்கள்.. என்னமாதிரியான டிசைன் இது?


SUBBU,MADURAI
ஜூன் 22, 2025 14:02

Pakistan called its nukes 'Islamic bomb' for this day. When enemies of Islam are attacking a Muslim country, Pakistan making sure Muslims get no help. Sunni Pakistan hasnt just backstabbed Shia Iran. It has also betrayed trust of 40 Million Shia Muslims living in Pakistan. Shias wont trust Pakistan ever again.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை